உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

இளங்குமரனார் தமிழ்வளம்

18

வந்தவனுக்கே பிச்சை சேரும்” என்றான் வீட்டுக்காரன். “நல்லது. நீ திட்டுவதை நான் ஏற்றுக் கொள்ளாவிட்டால் அது எவரைச் சேரும் என்றார். உன்னைத் தானே சேரும்" என்றார். கவலையை மடைமாற்றித் திருப்பவல்லவர் காட்சி

து

அறிவின் தலையாய அறிவு மெய்யறிவு.

அதனை

உண்மையறிவு. இலங்கறிவு,விளங்கறிவு,வாலறிவு என்றும்கூறுவர். இம்மெய்யறிவு வாய்ந்தவர் இயலும் செயலும் தனித்தன்மை வாய்ந்தனவாம். அவர்கள் வசையையும் வாழ்த்தாகக் கெ ாள்ளப் பழகியவர்கள்; புல்லரிசிக்கஞ்சியையும் நெய் கலந்த நெல்வரிசிச் சோறாகக் கருதுபவர்கள்; கொடுங்கசப்பமைந்த எட்டிக்காயையும் கட்டிப் பாகாகக் கொள்பவர்கள்.

66

வைததனை இன்சொல்லாக் கொ ள்வானும் நெய்பெய்த சோறென்று கூழை மதிப்பானும் - ஊறிய

கைப்பதனைக் கட்டியென் றுண்பானும் இம்மூவர் மெய்ப்பொருள் கண்டுவாழ் வார்”

என்கிறது திரிகடுகப் பாட்டு

வறுமை துன்பமானதா? வறுமை துன்பமானதுதான் எரியும் நெருப்பில் கண்ணுறங்கவும் கூடும் ஆனால் வறுமையின் இடையே இமைமூடவும் இயலாது என்று வள்ளுவர் கூறுகிறார். வறுமையை வெல்லும் முயற்சியையும் வினையாண்மையையும் வினைத் திட்பத்தையும் வள்ளுவர் கூறத் தவறவில்லை! ஏன் வறுமையையும் வறுமையாக்கிய வலியவர்கள் வரலாற்றில் எத்துணைப் பேர்?

சென்னை உயர் நீதி மன்றத்தின் நீதிபதியாகத் திகழ்ந்த சர். தி. முத்துசாமி ஐயர், உருசியாவை உருவாக்கிய புரட்சி வீரர் லெனின், மூலதனம் என்னும் இணையற்ற நூலைப் படைத்து மார்க்சியம் என்னும் கொள்கையை உருவாக்கிய கார்ல் மார்க்சு, சமுதாய ஒப்பந்தம் என்னும் நூலைப் படைத்துப் பெரும் புரட்சி செய்த ரூசோ, அமெரிக்க நாட்டில் லிங்கன் இவர்களெல்லாம் மாடமாளிகையில் பிறந்து செல்வச் செழிப்பிலே வளர்ந்து வாழ்ந்தவர்களா? அடுத்த வேளைக்கு என்ன செய்வோம் என ஏங்கிய ஏழைக் குடியிலே பிறந்தவர்கள் தாமே! இவர்கள் வெற்றியை வறுமைத் துயர் தடுத்து விட்டதோ?