உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் வளம்

9

சிலர் பிறப்பிலேயே உறுப்புக் குறையுடையவர்களாகப் பிறக்கின்றனர். சிலர் பின்னாளில் உறுப்புக் குறையுடையவர்கள் ஆகின்றனர். இக்குறைபாடு வாழ்வின் வெற்றிக்குத் தடையாகுமா?

பார்க்கும் ஆற்றல் இல்லாத ஒருவர் கெலன் கெல்லர், அவர்க்குக் கேட்கும் ஆற்றலும் இல்லை. பேசும் ஆற்றலும் ல்லை. ஒன்றரை வயதில் இப்படியாகிவிட்டார். ஆனால் இக்குறைகள் அவர் வெற்றிக்குத் தடையாகி விட்டனவா?

பார்வை இருப்பவர்கள் படித்ததைப்போல் பன்னூறு மடங்கு படித்தார்.செவியுள்ளவர்கள் கேட்பதை விட நன்றாகக் கேட்டார்; இசைக் கலையையும் இனிது நுகர்ந்தார் பிறர் நுகரவும் இசைத்துக் காட்டினார். பெரும் பெரும் மேடை களிலும் அரங்குகளிலும் சொற்பெழிவுகள் செய்தார். அயரா முயற்சியாலும் தணியா ஊக்கத்தாலும் தமக்குத் தடைகளாக வாய்ந்த உறுப்புக் குறைகளையெல்லாம் சுக்கல் சுக்கலாக உடைத்தெறிந்தார் இத்தகையவர்களை நோக்கித்தான் திருவள்ளுவர். “உறுப்புக் குறை ஒரு குறையன்று; அறிவறிந்து அரிய முயற்சி செய்யாமையே குறை” என்றார். இதனை மெய்ப்பிக்கின்ற உரவோர்கள் உலகில் பலர். அவர்கள்,

66

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு இடும்பை படாஅ தவர்”

என்பதை மெய்ப்பிக்கின்றவர் ஆவர்.

ஒரு செயலைச் செய்யத் தொடங்குகிறோம். அச் செயலைத் தொடங்கிய அளவானே வெற்றி வாய்த்து விடுமா? சில செயல்கள் தடையின்றி நிறைவேறலாம். இன்னும் சில செயல்களோ பலப்பலதடைப்பாடுகளுக்கும் இடனாகி அயரா முயற்சியாலேயே வெற்றிகாணத் தக்கதாக அமையும். அதனால்தான், திருவள்ளுவர் வினைத் திட்பம் என்னும் அதிகாரத்தில் “வினைத் திட்பம் என்ப து ஒருவன் மனத்திட்பம்” என்றார். “எண்ணியதை எண்ணிய வாறே முடிப்பர் எண்ணியவர், மனத் திண்மையுடையவராக இருந்தால்” என்றும், “மனம் அசையாமல், காலம் தாழ்த்தாமல், விரைந்து ஊக்கமாகச் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

எடுத்துக் கொண்ட செயலுக்குத் தடை வந்தவுடனே பெரும்பாலோர் சோர்ந்து விடுகின்றனர். ஆனால் துணிவு ஆ