உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

இளங்குமரனார் தமிழ்வளம்

18

66

அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கட் படும்”.

என்பது திருக்குறள்.

அடுக்கி வரினும் என்றார் திருவள்ளுவர். அவன் அழிவிலான் ஆதலால் அடுக்கி வர முடியாது என்பது திருவள்ளுவர் கருத்து. அப்படியே அடுக்கி வந்தாலும் அவன் விட்டு வைக்கப் போவ தில்லை என்பதை வெளிப்படுத்துவது போல அழிவிலான் என்றார். அவன் துன்பத்தை அழிப்பவனே அல்லாமல் அவன் அழிவில்லாதவனே யாவன் என்பது வெளிப்படை. இடுக்கண் செய்ய வந்த இடுக்கண் தான் இடுக்கண் படுமே, அல்லாமல் எவனை இடுக்கண் செய்ய வந்ததோ அவனை ஒன்றும் செய்து விடமாட்டாது என்று உறுதிப்படுத்துகிறார். தோற்றுப் போய் இழிவு படுவதற்காக இவ்விடுக்கண் இந்தப் படையெடுப்பை நடத்துகின்றதே என்று இகழ்வது போல் இடுக்கண் இடுக்கட்படும் என்கிறார் வள்ளுவர். அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கட்படுமா? இடுக்கட்பட்டதை வரலாற்று உலகம் அடுக்கிக் காட்டுகின்றதே இரண்டு பெருமக்களை எண்ணிப் பார்ப்போமே!

முன்னே வருபவர் இந்திய நாட்டின் தந்தை காந்தியடிகளார், அவர் ஆப்பிரிக்காவில் ஒரே ஒருநாள் பட்டபாட்டை 'லூயி பிசர்’

குறிப்பிடுகிறார்.

"காந்தியும் லாப்டனும் நடந்து கொண்டேயிருக்கும் போது கூட்டம் பெருகியது: வன்முறையிலும் இறங்கி விட்டது. லாப்டனிடமிருந்து காந்தியை மக்கள் பிரித்துத் தனிப் படுத்தினார்கள். அவர்மீது கருங்கல், செங்கல், முட்டை இவற்றையெல்லாம் வீசினார்கள். பிறகு அவரிடம் நெருங்கி வந்து அவருடைய தலைப்பாகையைப் பிடுங்கிக் கொண்டார்கள். அவரை அடித்தார்கள்; உதைத்தார்கள்; வலிதாங்காமல் காந்திக்கு மூர்ச்சை தளர்ந்தது,என்றாலும்ஒருவீட்டின் இரும்புக்கம்பிகளைப் பிடித்துக் கொண்டார். அப்போதும் வெள்ளைக்காரர்கள். உடம்பில் அடித்துக் கொண்டே இருந்தார்கள். காவல்துறைக் கண்காணிப்பாளர் அலெக்சாண்டர் என்பவரின் மனைவியார் இவ்வேளையில் அப்பக்கம் வந்தார். அவருக்குக் காந்தியைத் தரியும்; அவர் குறுக்கிட்டார். வெறிபிடித்த கூட்டத்துக்கும்