உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் வளம்

13

காந்தியடிகளுக்கும் இடையே வந்து நின்று கொண்டார். பின்னர், காவல் துறையினர் வந்து காந்தியடிகளைக் காத்தனர்.

தாக்கியவர்கள் மேல் வழக்குத் தொடுக்குமாறு காந்தியடிகள் வலியுறுத்தப் பெற்றார். ஆனால் அடிகள் அதனை மறுத்துவிட்டார். “இது அவர்களுடைய குற்றம் அன்று; நாட்டுத் தலைவர்களும் நேட்டால் அரசுமே இதற்குப் பொறுப்பாளர். இது என் உறுதியான நம்பிக்கை பற்றிய செய்தி; இதில் நான் தன்னடக்கம் காக்கவே விரும்புகிறேன்” என்றார் இதனைக் குறிப்பிடும் பேராசிரியர் எட்வர்ட்டு தாம்சன் என்பார் “தம் வாழ்நாள் வரை ஒவ்வொரு வெள்ளையர் முகத்தையும் காந்தியடிகள் பகைத்திருந்தால் முறையாக இருக்கும்”என்றார். ஆனால் காந்தியடிகளோ ஆங்கிலவரைப் பகைவராகக் கருதினர் அல்லரே! கருதியிருந்தால் அவரை இடுக்கண் வெற்றி கொண்டிருக்கும்! அவர் இடுக்கணுக்கு இடுக்கண் தந்தவர் அல்லரோ!

66

இன்னொருவர், திரு.வி.க.ஆவர்.

66

யான் ஒரு சிறு சிறு குடிலில் பிறந்தவன்; எளிமையில் வளர்ந்தவன்” என்றும், “ஓலை வேய்ந்த குடிசையில் தேளும், பாம்பும் நடமாடிய இடத்தில் யான் வளர்ந்தேன்” என்றும் திரு.வி.க. தம் வாழ்க்கைக் குறிப்பில் குறிப்பிடுகிறார். பின்னே என்ன வளமையில் தவழ்ந்தாரா? கையிலே பணப்பையும் வீட்டிலே பணப் பெட்டியும், வங்கியிலே இருப்பும், தமக்கென ஒரு வீடும் இல்லாமலே வாழ்நாளெல்லாம் இருந்தார் திரு.வி.க. ஆனால் அதற்காக வருந்தினாரா?

பள்ளிப் படிப்பை இடையில் விடுத்தார்; தாமே முயன்று கற்று ஆசிரியப் பணியேற்றார். அப்பணியையும் நாட்டுத் தொண்டுக்காக உதறினார். தொழிலாளர் தொண்டில் கல்லனைய உடலும் கரைந்தார் கண்ணொளி மறையும் இடருற்றார். இனிய மனைவி மக்களையும் அடுத்தடுத்து இளமையிலேயே இழந்தார். ஆனால் அவர் தம் வாழ்வை எவ்வாறு மதித்தார் இடருடைய தென்றொ எண்ணினார்?

“எவருடைய வாழ்க்கையில் அறிவு படிப்படியே வளர்ந்து எவ்வுயிரும் பொதுவெனும் தெளிவு தோன்றித் தம் உயிரே பிறவுயிரும் என்னும் உணர்வு பொங்கித் தொண்டு செய்யும்