உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

இளங்குமரனார் தமிழ்வளம்

18

அன்புச் செல்வமாகிய அந்தண்மை அமைகிறதோ அவர் வாழ்க்கை வெற்றியுடையதென்றும் மற்றவர் வாழ்க்கை தோல்வி யுடையதென்றும் எனது கல்வி கேள்வி ஆராய்ச்சி அனுபவம் முதலிய எனக்கு உணர்த்துகின்றன என்றார்.

இல்லையேல் கண்ணொளி மங்கிய நிலையில் 'இருளில் ஒளி' இயற்றுவரோ? முதுமையில் முதுமை உளறலும், படுக்கையில் பிதற்றலும், சித்தந்திருந்தல் அல்லது செத்துப் பிறத்தலும் இயற்றி உலகுக்கு உதவுவரோ?

திரு.வி.க.வின் வாழ்வு இடுக்கணுக்கு இடுக்கண் தந்த வாழ்வு! ஆதலால் வெற்றி வாழ்வாயிற்று.