உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. நலமார்ந்த நட்பு

பண்பு,

அன்பு ஓர் அருமையான அப்பண்பை உடையவராக ஒருவர் இருப்பதே உயிருடையவர் என்பதற்கு அடையாளம் என்கிறார் திருவள்ளுவர். இத்தகைய உயர்ந்த அன்புக்கு, ‘அன்புடைமை’ என ஓர் அதிகாரமே பாடினார் அவர்.

அன்பினும் உயர்ந்தது அருள். எல்லா உயிர்களையும் தன் உயிர்போல் பேணும் தன்மையே அருளாகும். அதனையும் அருளுடைமை' என்னும் ஓரதிகாரத்திலேயே பாடினார் " திருவள்ளுவர்.

எந்த நன்றியை மறந்தாலும் உய்வு உண்டு. ஆனால், ஒருவர் செய்த நன்றியை மறந்தவர்க்கு உய்வே இல்லை என்னும் அருமையும் பெருமையும் வாய்ந்தது நன்றியறிதல், அதனைச் செய்ந் நன்றியறிதல்' என்னும் ஓரதிகாரத்தால் மட்டுமே பாடினார். ஆனால் நட்பைப் பற்றி எத்தனை அதிகாரங்கள் இயற்றியுள்ளார்?

நட்பு, நட்பாராய்தல், கூடா நட்பு தீ நட்பு, பழமை என்பவற்றைக் கூறுகிறார். சிற்றினஞ் சேராமை, பெரியாரைத் துணைக்கோடல், உட்பகை முதலியவற்றையும் கூறுகிறார். இவையெல்லாம் நட்பைப் பற்றியனவே, இவ்வதிகாரங்களின் எண்ணிக்கைப் பெருக்கம், நட்பின் சிறப்பை மட்டுமோ சுட்டுகின்றது? நட்பினால் நேரும் சிக்கல்களையும் அவற்றைத் தீர்க்கும் வழிகளையும் நட்பின் நலங்களையும் பிறவற்றையும் விளக்குகின்றது.

ன்

மனித வாழ்வு கூடி வாழ்தலை இயல்பாக உடையது. தனியே ஒருவர் ஒரிடத்திற்குச் செல்வதினும், துணையுடன் செல்வதால் இன்பமும் நலமும் காண்பது. இத்துணை ‘வழித்துணை' எனப்படும்.