உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

இளங்குமரனார் தமிழ்வளம்

18

தன்னந்தனியே இருப்பவர்க்கு ஒரு பேச்சுத் துணை இருப்பது நலமாகின்றது, இத்துணை,‘நாத்துணை’ என்றும் 'சொற்றுணை' என்றும் சொல்லப்படும்.

இனித், துன்புறும் காலத்து அத்துன்பை ஒழிப்பதற்கு, ஓடி வந்து உதவும் துணையுண்டு; அத்துணைத் துயர்ந்துணை என்பர்

இத்துணைகளில் எல்லாம் மேம்பட்டது ‘வாழ்க்கைத் துணை'யாம். வாழ்க்கைத் துணையின் நன்மையைக் கருதியே திருவள்ளுவர், ‘வாழ்க்கைத் துணை நலம்' என்றார். ஏனெனில், வாழ்க்கைத் துணையே ‘மனத்துணை' யாக உள்ளதாம்.

மனத்தில் உள்ளதை, ஒழியாமல் மறையாமல், கூறுவதற்கு வாய்த்த துணை, மனத்துணையே, அத்துணையே பால் வேறுபாட்டால், காதலாகவும், பால் ஒன்றுபாட்டால்,நட்பாகவும் அமைகின்றதாம். காதலோடு ஒத்த நட்பை எளிமையான ஒன்றாக மதிக்கலாமோ? கூடாது என்றே, நட்பாராய்தலை விளக்குகிறார் திருவள்ளுவர்.

கீரை ஆய்தல், காய் ஆய்தல் என்பவை வழக்கில் உள்ளவை. குப்பை கூளம், தூசி தும்பு, காம்பு நரம்பு முதலியவற்றைக் களைந்து நல்லவை தேர்ந்துகொள்வதே ஆய்தலாம். எளிய உணவுப் பெருளாம் கீரை காய்கறி வகைகளையே ஆய்ந்து கொள்ளும்நாம் ஆக்கமும் கேடும் ஆக்கும், மனத்துணையாம் நட்பை எவ்வளவு ஆராய்ந்து கொள்ள வேண்டும்?

ஒருவரை நண்பராகத் தேர்ந்து கொண்ட பின்னர் அவரை ஆராய்வதா? நண்பராகக் கொள்வதற்கு முன்னர் அவரை ஆராய்வதா? வெள்ளத்தில் வீழ்ந்த பின்னர், நீந்தப் படிப்பேன் என்பார் நிலை என்னாம்? முன்னரே நீந்தப் பழகியிருத்தல் வேண்டுமல்லவோ? இல்லையானால், வெள்ளத்தோடு வெள்ளமாகப் போகாமல் தப்பிப் பிழைக்க மாட்டாரே அவர்

'பேயோடு ஆயினும் பிரிவு அரிது' என்பது பழமொழி. ஆதலால், ஒருவரொடு நட்புச் செய்து, பின்னர் அவரைப் பிரிவது என்பது முடியாதது. அன்றியும், கேடானதும் கூட ஆதலால் தக்கவரைத் தேர்ந்து, நட்புக் கொள்ளுதலே முறைமையாம். இக் கருத்தையே,