உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

வாழ்வியல் வளம்

நாடாது நட்டலில் கேடில்லை: நட்டபின் வீடில்லை நட்பாள் பவர்க்கு”

என்றார் திருவள்ளுவர்.

66

17

"நட்பாள்பவர்க்கு நட்ட பின் வீடில்லை ஆகையால், நாடாது நட்டலில் கேடில்லை” என்பது இக்குறளின் பொருள்

முறை.

நாடுதல் என்பதற்குப் பல பொருள்கள் உண்டு. அவற்றுள் விரும்புதல்,ஆராய்தல் என்பவை குறிப்பிடத்தக்கவை. விரும்புபவை எல்லாம் நல்லவை இன்பமானவை- என்பது இல்லை! அவற்றை ஆராய்ந்தே நல்லவையா அன்றி அல்லவையா எனக்கொள்ள வேண்டும் என்பதை விளக்கும் சொல்லே நாடுதல் என்பதாம்.

ஒருவரை ஆராயாமல் நண்பராக்கிக் கொள்ளல் கூடாது. அப்படி ஆக்கிக் கொண்டால் அவரைப் பிரிதற்கு இயலாது. அதனால் உண்டாம் கேட்டைப் போல் வேறு கேடு இல்லை என்பது இக்குறளின் விளக்கமாம்.

ஒருவர் தம் கையை மூடிக்கொண்டு “என் கைக்குள் ருப்பதைக் கூறு” என்று கேட்கிறார். அவர் கைக்குள் என்ன வைத்திருக்கிறார் என்பதை அறியாத மற்றவர் திகைக்கிறார்.. ‘இது’ ‘இது' என்று எதை எதையோ சொல்கிறார். 'இல்லை' இல்லை' என்று சொல்லி மறுக்கிறார் கையை மூடியிருப்பவர், கைக்குள் இருப்பதைச் சொல்ல முடியாதவர் “எனக்குக் குறி சொல்லத் தெரியாது” என்று ஒதுக்குகினறார், மூடிய கைக்குள் உள்ள, பொருளையே இன்னதென்று அறிய முடிவது இல்லையல்வா? இவ்வாறாக மூடி வைத்த பெட்டிக்குள் இருப்பவற்றையோ பூட்டி வைத்த வீட்டுக்குள் இருப்ப வற்றையோ இன்னவை என்று கூறி விட முடியுமா? இவற்றையே சொல்ல முடியாது என்றால் ஒருவர் கூட்டுக்குள் இருக்கும் எண்ணத்தை மற்றொருவர் இன்ன தென்று திட்ட வட்டமாகக் கூறிவிட முடியுமோ? ஆனால், அறிவியல் உலகம் என்ன செய்துள்ளது?

பல்லாயிரம் அடிக்குக் கீழே புதைந்துள்ள பொருள்களையும், பல்லாயிரம் கல் தொலைவுக்கு மேலேயுள்ள பொருள்களையும் உள்ளது உள்ளவாறு அறிந்து கொள்ளத் தக்க கருவிகளைப் படைத்துள்ளது மேல் போர்வை மட்டுமன்றித் தோல்