உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

இளங்குமரனார் தமிழ்வளம்

18

போர்வைக்குள்ளேயும் அடங்கியிருக்கும் உடல் உறுப்புகளையும் அவற்றின் இயக்கங்களையும் அப்படிஅப்படியே கண்டு கொள்ள ஒளிப் படம் எடுக்கும் கருவிகளைக் கண்டுபிடித்துள்ளது! இத்தகைய விந்தை அறிவியல் உலகமும் ஒருவர் நெஞ்சத்தில் உள்ள நினைவைத் திட்டவட்டமாகக் கண்டு கொள்வதற்குரிய ஒரு கருவியைக் கண்டுள்ளதோ? காணவும் முடியுமோ? காற்றின் அழுத்தத்தையும், நெஞ்சத் துடிப்பின் அழுத்தத்தையும் கண்டு கொள்ளக் கருவிகளைக் கண்டுள்ள அறிவியல் உலகம் நினைவைக் கணக்கிட்டுக்கூறும் கருவியைக் காண முடியவில்லையே! காணல் அருமையை உணர்ந்து தானே திருவள்ளுவர். அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம்” என்றார்.

முகத்தைக் காட்டும் கண்ணாடிகளிலேயே எத்தனை வேறுபாடுகள்? ஒருவர் முகத்தையே ஒவ்வொரு கண்ணாடியும் ஒவ்வொரு வகையில் காட்டுவது இல்லையா? முகங்காட்டும் கண்ணாடி நிலையே இவ்வாறானால், அகத்தைக் காட்டும் முகத்தின் தன்மை உள்ளவாறு உணர அமைந்து விடுமோ?

முகத்தைக் கண்ட அளவானே அகத்தைக் கண்டு கொள்ள எல்லார்க்கும் இயலுமானால் ஏமாறுவாரும் ஏமாற்றுவாரும் உலகில் இருப்பரோ? உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுதல் நிகழுமோ? உள்ளத்தே கசப்பு வைத்து உதட்டிலே இனிப்பு வைத்துப் பசப்புவார் உலவ முடியுமோ?

கும்பிட்டகையினுள்ளும் கொலைக் கருவி இருக்கக் கூடும் என்று எச்சரித்தாரே திருவள்ளுவர்; இதற்குக் காலந்தோறும் காணும் சான்றுகள் இல்லாமலா போய் விட்டன?

அழுகையைக் கண்டு ஏமாந்து விடாதே? அவ்வழுகைக் குள்ளேயே உன்னை அழிக்கும் வஞ்சம் அடங்கியிருக்கும் என்று தெளிவித்தாரே, திருவள்ளுவர், இதற்கு உலகில் சான்று ல்லாமலா போய்விட்டது? ஆதலால் தான், ஒருவர் இயல்பை மேலோட்டமாக ஆராய்ந்தால் போதாது. மேலும் மேலும் ஆராய்தல் வேண்டும்; அப்படி ஆராய்ந்தே ஒருவரை நண்பராகக் கொள்ள வேண்டும் என்று அழுத்திக் கூறினார்.

வி ருந்தில் படைத்த வகை வகையான உணவுகளைக் கொண்டு ஒரு வீட்டின் வளத்தைச் சொல்லி விட முடியுமா?