உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் வளம்

19

மணவிழாப் பந்தலில் காணும் ஒருவர் மகிழ்வைக் கொண்டு அவர் வாழ்வின் மகிழ்வை மதிப்பிட்டு விடமுடியுமோ?

நாடகத்தில் வரும் பாத்திரத்திற்குத் தக்கவாறு நடிக்கும் நடிப்பைக் கொண்டு ஒருவரை நல்லவர் அல்லவர் என மதிப்பிடுவது முறையில்லையே!

பருப்பொருள்களையே மேலோட்டமாகப் பார்த்து முடிவு செய்ய முடியாதிருக்க, நுண்ணிதில் நுண்ணிதாம் எண்ணத்தை எண்ணி அறிவதன் அருமை அறிந்தே திருவள்ளுவர்.

66

ஆய்ந்து ஆய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை தான்சாம் துயரம் தரும்” என்றார்.

கேண்மையாவது நட்பு; சாம் துயர் என்பது சாவும் துயராம்! நொடி நொடிதோறும் சாவது போன்ற துயரம், சாகுமளவும் வரும் துயரம் ஆம்.

பலகாலும் பல நிலைகளிலும் ஆராய்ந்து பார்த்தே ஒருவரை நண்பராகக் கொள்க என்பது இக்குறளின் பொருளாம்.

"கண்ணாரக் கண்டதும் பொய்; காதாரக் கேட்டதும் பொய்; தீர ஆய்வதே மெய்” என்பது பழமொழி.

நட்புச் செய்தற்கு உரியவரைப் பலகாலும் பலவகைகளிலும் ஆராய்ந்து கொள்ள வேண்டும் என்று கூறினார் திருவள்ளுவர். எவற்றை ஆராய வேண்டும் என்று கேள்வி எழும் அல்லவோ?

கை காட்டி மரமென்றால் நின்ற இடத்தில் இருந்தே வழி காட்டிக் கொண்டு இருக்கலாம். இருக்கலாம். ஆனால் அறிவறிந்த வழிகாட்டியாக இருக்கும் ஒருவர் வழிகூட்டியாகவும் இருப்பார் அல்லரோ? ஆதலால் திருவள்ளுவர், ஒருவரை நண்பராகக் கொள்வதற்கு முன் ஆராய வேண்டியவை இவை என்பதைக் குறிப்பிடுகிறார்.

66

குணனும் குடிமையும் குற்றமும் குன்றா இனனும் அறிந்தியாக்க நட்பு”

என்பது அது.

ஒருவர் குணத்தையும் ஆராய வேண்டும்; அவர் குற்றத்தையும் ஆராய வேண்டும். அவர் பிறந்த குடியையும் ஆராய வேண்டும்; அவரைச் சேர்ந்த கூட்டத்தையும் ஆராய வேண்டும். இந்