உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

இளங்குமரனார் தமிழ்வளம்

18

நான்கையும் ஆராய்ந்த பின்னரே தக்கவராயின் அவரை நண்பராகக் கொள்ள வேண்டும் என்றார்.

இக்குறளை நுண்ணிதின் நோக்கிய மணக்குடவர் “இவை ஒத்தனவாயின் உறவு நீளச் செல்லும்” என்றார். உறவு நீடிக்க வேண்டும் என்றால் இந்நான்கும் ஒத்தனவாக அமைய வேண்டும் என்பது வெளிப்படையாம். “உன் நண்பன் எவன் என்று கூறு நான் உன்னைப் பற்றிச் சொல்லி விடுகிறேன்" என்பதோர் ஆங்கிலப் பழமொழி. "இனம் இனத்தோடு; வெள்ளாடு தன்னோடு” என்பது தமிழ்ப் பழமொழி.

மெய்ப்பொருள் கொள்கைகளுள் ஒன்று “சார்ந்ததன் வண்ணமாதல்” என்பது, ஒருவர் எந்தக் கூட்டத்தை அல்லது எந்தச் சூழலை ஒட்டி உறவாடி இருக்கிறாரோ, அக் கூட்டத்திற்கு அல்லது அச்சூழலுக்கு ஏற்ப அமைந்து விடுவார். அவர் அப்படி அமைந்து விடக்கூடாது என்று தம்மைத் திட்டப்படுத்திக் காண்டிருந்தான். 'சிற்றினஞ் சோராமையை' வலியுறுத்திய வள்ளுவர்,‘பெரியாரைத் துணைக்கோடலை'யும் வற்புறுத்தினார்.

தி

மனிதராகப் பிறந்தவரும் எவரும் பழுதிலா முழுதுறு குணத்தராக இருப்பதும் இல்லை. முற்றிலும் குற்றமே வடிவாகினாரும் இல்லை! குணமும் குற்றமும் இணைந்தே இயல்கின்றனர். இவற்றுள் குற்றம் மிகுதியா குணம் மிகுதியா என்பதை ஆராய்ந்து, குணம் மிக்காராயின் அவர் நட்பைக் கொள்க என்பது விளக்கமாம்.

குணம் மிக்காராயின் அவர் நற்குணத்தை நாம் பெற வாய்க்கும், குற்றமிக்காராயின் நமக்கு அமைந்த நற்குணத்தையும் இழந்து விடவல்லவோ நேர்ந்து விடும். ஊதிய மில்லாது போனாலும் உள் முதலையும் இழந்து விட எவராவது நினைவரா?

ஒரு செயலை ஒருவனிடம் ஒப்படைத்தற்கு அவன் குணத்தை ஆராய்ந்து, குற்றத்தையும் ஆராய்ந்து குணம் மிக்குளனாயின் அவனிடம் அச்செயலை ஒப்படைக்கவேண்டும் என்பதுவள்ளுவம். அத் தேர்வையே நண்பரைத் தேர்ந்து கொள்ளுதற்கும் தேர்வாக வைத்தார் திருவள்ளுவர். இதனைத் தெளிந்தாய்ந்த பரிமேலழகர், “குற்றமில்லாதார் உலகத்து இன்மையின் உள்ளது பொறுக்கப் படுவதாயின் அவர் நட்பு விடற்பாற் றன்று” என்று விளக்கினார். பொறுக்கத்தக்க குற்றமானால் பொறுத்துக்