உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் வளம்

21

கொண்டு நட்பைப் போற்றிக் கொள்ள வேண்டும்; ஏனெனில் முற்றிலும் குற்றமிலார் உலகத்தில் இலர் ஆதலால் என்பது அவர் கருத்தாம் “குற்றம்பார்க்கில் சுற்றம் இல்லை” என்பதை எவரே அறியார்? நெல்லுக்கு உமியும் நீருக்கும் நுரையும், பூவுக்குப் புறவிதழும் உண்மையை எவரே தெரியார்?

னிக் குடிமையையும் இனத்தையும் ஆராய்ந்து நட்புக் கொள்ள வேண்டும் என்பதை எண்ணுவோம்.

நல்ல குடியில் பிறந்தவர்க்கு இயல்பாகவே நல்ல குணங்கள் பலவும் அமைந்திருக்கும், அவர்கள் எத்தகைய வறுமைக்கு ஆட்பட்டு அல்லல் உற்றாலும் தம் இயல்பில் இருந்து தவறார். கோடி கோடியாகச் செல்வம் குவிப்பதாக இருந்தாலும் குடிப் பெருமையைக் கெடுக்கும் குற்றஙகளைச் செய்யார். ஆதலால் நற்குடிப் பிறந்தாரை நயத்து நட்புக் கொள்ளல் சிறப்பாம்.

இனி, இனமாவார் சுற்றத்தாராம், அவர்க்குத் தனிச் சிறப்பாம் தன்மை ஒன்று உண்டு. ஒருவன் எத்தகைய வறுமைக்கு ஆட்பட்டு நலிந்தாலும் அவனுக்கும் தமக்கும் உள்ள பழைய உறவைப் பாராட்டி தழுவிக் கொள்ளும் தன்மையே அதுவாம். அத்தகைய இனத்தவர் நண்பராக வாய்ப்பின் ஒன்றுக்கு இரண்டாய் நன்மையும் நெருக்கமும் அமையும். ஆதலால் தான் இனம்' என்று மட்டும் சொல்லாமல் குன்றா இனம் - குறைவிலா இனம்-என்றார் பொய்யாமொழியார். (இக்குறளால் குணமும் குற்றமும் குடிமையும் இனமும் ஆராய்ந்து அவரொடு நட்புக் கொள்க என்று அறிவுறுத்தினார் திருவள்ளுவர்.)

ஒவ்வொருவர் வாழ்வுக்கும் கட்டாயமாகச் சில பொருள்கள் தேவைப்படுகின்றன. அவற்றை எண்ணிச் சொன்னால் மூன்று எண்ணலாம் அவை உண்டி, உடை, உறைவிடம் என்பனவாம்.

இம் மூன்றும் அடிப்படைத் தேவைகள். கட்டாயம் இல்லாமல் முடியாதவை. ஆனால் இம் மூன்றுடன் மனித வாழ்வு நிறைவடைந்து விடுகின்றதா?

நாம் நாள்தோறும் பயன்படுத்தி வரும் பொருள்களை இரண்டு பட்டியலாகப் பகுத்து எழுத வேண்டும். ஒன்று கட்டாயமாக இல்லாமல் வாழ முடியாத பொருள்கள்: மற்றொன்று இல்லாமலும் வாழக்கூடிய பொருள்கள் பகட்டுப பொருள்கள் என்னும் பொருள்கள். இவ்விரு வகைப்பட்ட