உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

இளங்குமரனார் தமிழ்வளம்

18

பட்டியல்களையும் கணக்கிட்டு ஒப்பிட்டால் முன்னதனினும் பின்னதே பலர் வாழ்வில் மிகுந்திருக்கக் காணலாம். அவர்கள் வாழ்வில் வேண்டாப் பொருள்களுக்குப் பணம் வீணாவதால் வேண்டும் பொருள்களை வாங்குவதற்குத் தட்டுப்பாடும மூட்டுப்பாடும் ஏற்படுவதும் உண்டு.

ஒரு பொருளை வாங்குகின்றோம் என்றால் அதற்கு விலையாகப் பணம் தந்தோ உழைப்பைத் தந்தோ மாற்றுப் பண்டம் தந்தோ, அல்லவோ கொள்கிறோம். உழைத்துத் தேடிய பொருளை உடல் ஊட்டத்திற்கும் உயிர் நலத்திற்கும் உயர்ந்த வாழ்வுக்கும் அல்லவோ பயன்படுத்த வேண்டும். அதனை வீணுக்கும் வெட்டித் தனத்திற்கும் அழித்துவிடக் கூடாதே.

திருவள்ளுவர் காலத்திலேயே வாணிகம் வளமாக நடந்து வந்ததற்குக் குறிப்பு உள்ளது. வாணிகர்கள் தம் பொருளைப் போலவே பிறர் பொருளையும் பேணி வாணிகம் செய்தனர் என்பதை அறிய முடிகின்றது. இப்போது நிலை வாணிகத்தை அறநிலை வாணிகமாக நடத்த வலியுறுத்திய திருவள்ளுவர் ஒரு புதுமையான வாணிகத்தையும் குறிப்பிடுகிறார். அதனை நேரிடைமுறையில் கூறுவதுடன் எதிரிடைமுறையிலும் கூறுகிறார்.

ஒருவர் நல்லவராயின் அவர் நட்பை, அவர் வேண்டும் பொருளைக் கொடுத்தாயினும் வாங்கிக் கொள்ளுதல் வேண்டும் என்பது அது.

66

கொடுத்தும் கொளல் வேண்டும் நட்பு”

என்பது அது.

நல்லவர் நட்பைக், ‘கொடுத்தும் கொளல் வேண்டும்' என்ற வள்ளுவர், அல்லவர் நட்பையும் சுட்டுகிறார், நம் நட்புக்குப் பொருந்தாதவர் நட்பை, அவர் விரும்புவது எது வாயினும் அதனைக் கொடுத்தாவது விலக்கி விட வேண்டும் என்கிறார்.

66

ஒன்றீத்து ஒரூஉக ஒப்பிலார் நட்பு”

என்பது அது.

நல்லோர் நட்பைக் கொடுத்தும் கொளல் வேண்டும் என்ற வள்ளுவரே, அல்லோர் நட்பைக் கொடுத்தும் விடல் வேண்டும் என்கிறார். நல்லோர் நட்பைக் கொடுத்துக் கொள்வதால்