உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் வளம்

23

உண்டாம் நன்மையினும், அல்லோர் நட்பைக் கொடுத்தும் விலக்குதலே பன்மடங்கு நன்மையாம். என்னெனின் நல்லோர் நட்பு இல்லையானாலும் தன்னிலையில் தாழாமல் ஒருவன் வாழலாம். ஆனால் அல்லோர் நட்பை இல்லையானாலும் தன்னிலையில் தாழாமல் ஒருவன் வாழலாம். ஆனால் அல்லோர் நட்பை விலக்காமல் இருந்தால் தன்னிலையில் தாழாமல் இருக்க முடியாதல்லவா

னிக் கொடுத்தும் நட்புக் கொள்ளத் தக்க நல்லோர் எவர் என்பதையும் தெளிவாக்குகிறார் திருவள்ளுவர். அவர், குடிப்பிறந்து தன்கண் பழிநாணுவான்” என்றார்

66

66

நற்குடியில் பிறந்தால் மட்டும் போதாது தனக்கு வரும் பழிக்கு நாணுபவனாகவும் இருக்க வேண்டும் என்பாராய்க் 'குடிப்பிறந்து தன்கண் பழிநாணுவான்” என இணைத்துச் சொன்னார். நாணுதல் என்பது செய்யத் தகாத செயல் செய்தற்கு வெட்கப் படுதலாம்

சோழன் மாவளத்தான் என்பானும் தாமப்பல் கண்ணனார் என்னும் புலவரும் வட்டாடுதல் என்னும் ஆட்டம் ஆடினர். ஆட்டத்தின் போது புலவர் வட்டுக்காய் ஒன்றை மறைத்துவிட்டார். அதனைக் கண்ட மாவளத்தான் சினங்கொண்டு தன் கையில் இருந்த வட்டால் புலவரை எறிந்தான். புலவர் செய்தது தவறே எனினும் அவர் மாவளத்தானைப் பார்த்துப் புறாவின் துயர் தீர்ப்பதற்காகத் தன்னையே தந்த சோழன் சிபியின் வழிவந்தவனோ நீ; நீ சோழன் மகன் அல்லன் என்றார், ‘சோழன் மகன் அல்லன்' என்று சொல்லுமாறு குடிக்குப் பழியாக்கி விட்டேனே என நாணினான் மாவளத்தான். அதனைக் கண்டு வருந்திய புலவர், “உனக்கு நான் பிழை செய்தும், நீ எனக்குப் பிழை செய்தாய் போல நாணங் கொண்டாய்; நின்னைப் போலும் உயர்குடிப் பிறந்தார்க்கு இது இயற்கை போலும்” என்றார். இச் செய்தியால் நற்குடிப்பிறந்தார்க்கு நாணம் இயல்பாதல் தெளிவாம். ஆதலால், குடிப்பிறந்து நாணுவார் நட்பைக் கொடுத்தும் கொளல் வேண்டும் என்றார் வள்ளுவர்.

L

உள்ளங்கவர் ஓவியத்திற்குப் பல்லாயிரம் கொடுத்து வாங்குவார் உளர், கொள்ளை கொள்ளும் சிற்பத்திற்கு இலக்கக் கணக்காய்க் கொடுத்து வாங்குவார் உளர். பொன்னும் மணியும்