உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் வளம்

25

பள்ளம் நோக்கி ஓடும் வெள்ளம் போல, உள்ளமும் சில வேளைகளில் தாழ்ந்து ஓடும்; உரிய தல்லா வழியில் விலகிச் செல்லும், அந்நிலையில் அறிவுறுத்தி வழிப்படுத்த வாய்த்த துணை நட்பேயாம்! மற்றையோர் அறிவுறுத்தல் புகாத இடத்திலும் நண்பன் அறிவுரை ஒன்றே நெறிப்படுத்தும்! அறிவுரைக்கும் ஆசிரியன் உரையினும், அரவணைக்கும் பெற்றோர் மொழியினும், தண்டிக்க முந்து நிற்கும் சட்டத்தினும் ஒருவனை அவன் உணர்ந்து நல்வழிப்பட வைப்பது நன்னண்பன். ஒருவன் உரையும், பாதுகாப்பும் துணையுமேயாம்! அவன் பாதுகாவலே வழுக்கு நிலத்தில் நடக்குங்கால் ஊன்று கோல் போல் உடனாக்கிக் காப்பதாம்! ஆதலால் நண்பன் என்பான் உருவத்தால் ஒருவன் ஆனாலும், அவனே தாயும் தந்தையும் ஆசானும் பாதுகாவலனுமாகப் பல நிலைகளில் பலராய்த் திகழ்கின்றானாம்

இடித்துரைக்க வேண்டிய இடத்தில் இடித்துரைக்கும் அமைச்சனை இல்லாத அரசன் தன்னைக் கெடுக்க ஒருவர் வேண்டாமலும் தானே கெட்டுப் போவான் என்பார் திருவள்ளுவர். அவ்வாறே இடித்துரைக்க வேண்டிய இடத்தில் இடித்துரைக்கும் நண்பனைப் பெறாதவனும் தன்னைக் கெடுக்க வேறு எவரும் வேண்டாமல் தானே கெட்டுப் போவான் என்று குறிப்பிடுகிறார்.

"உண்மை கசக்கும்" என்பது பழமொழி, உண்மையை நேருக்கு நேர் சொல்லும் போது உண்மை தவறியவர்க்கும் கேட்கக் கசப்பாகவே இருக்கும். எவ்வளவு நேர்மையானாலும் முகத்துக்கு நேரே குற்றம் கூறுவதை எத்தனை பேர்களால் வரவேற்க முடிகிறது? அப்படி நேருக்கு நேர் கூறுவதை விரும்பாதது மட்டுமின்றி, வெறுக்கவும் செய்தல் இல்லையா? இந்நிலையிலும் உண்மை நண்பன் என்பவன் நண்பன் நலமொன்றே கருதி இடித்துச் சொல்ல வேண்டியதைச் சொல்லியே ஆகவேண்டும். அப்படிச் சொல்லத் தவறினால் தனக்கோ தன் நண்பனுக்கோ நன்மை செய்தது ஆகாது.

மகிழ்வுத் துணையாக இருப்பதே நட்பு என்று கருதுபவன், டித்துக் கூறி இன்னல் விளைப்பதை ஏற்பனா? ஏற்காமல் எதிரிட்டு நிற்பதும் உண்டல்லவா! இடித்துரை தாங்காமல் அழுது தேம்புவது கூட இல்லையா? அவன் அழுவதைக் கண்டு