உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

இளங்குமரனார் தமிழ்வளம்

18

அதற்காக உருகி இப்படி அழவைத்து விட்டோமே என்று உண்மை நண்பன் வருந்த வேண்டியதில்லை. இப்பொழுதில் அழும் அழுகையை நினைத்து, விட்டு விட்டால் அவன் எப்பொழுதும் அழுதுகொண்டே இருக்க வேண்டியவன் ஆகிவிடுவான். மருந்துண்ண மறுக்கும் குழந்தையின் காலையும் கையையும் அமுக்கி வாயிதழை அதுக்கி, அன்னையார் மருந்து புகட்டுதல் போல் உண்மை நண்பன் கடமைபுரிய வேண்டும். இதனைக் குறிக்கும் திருவள்ளுவர்.

66

'அழச் சொல்லி அல்லது இடித்து

என்கிறார்.

நண்பன் தவறும் போது அழச் சொல்லல் இடித் துரைத்தல் இவ்விரண்டு மட்டும் போதா.

காட்டாற்று வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தினால் மட்டும் போதாதே. கால்வாய் வழியாகவும், வாய்க்கால் வழியாகவும் நீரைக் கொண்டு சென்று வயல்களில் பாய்ச்சி வளமான விளைவு காண வேண்டும் அல்லவா! அதுபோல, நல்வழி காட்டி அவ்வழியில் நிலை நிறுத்த வேண்டியதும் நண்பன் கடமையேயாம்.

ஆதலால் தான், “அழச் சொல்லி அல்லது இடித்து வழக்கறிய வல்லார் நட்பு ஆய்ந்து கொளல்” என்றார் திருவள்ளுவர். ஆய்ந்துகொளல்”