உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. வாழ்வியல் வழி

"தோன்றிற் புகழொடு தோன்றுக” என்பதற்குச் சான்றாகத் தோன்றியது நில முளரி (ரோசா), எவ்வளவு கவர்ச்சி மிக்கது அது; குழந்தையர் உள்ளத்தையா, முதியர் உள்ளத்தையா, மகளிர் உள்ளத்தையா, உள்ளத்தை அது கவரவில்லை? பற்றற்ற துறவோரையும் பற்றிக்கொள்ளும் பெற்றியுடைய தன்றோ முளரி!

ஆடவர் உள்ளத்தையா

எவர்

முளரியை நினைத்த அளவில் நம் நினைவில் எவர் முந்துகிறார்? அதோ... "நேரு புகழொடு தோன்றுக” என்பதை உலகுக்கு, என்றென்றும் உணர்த்தும் ரோசா, தோன்றும்போதே புகழொடு தோன்றிய, நேரு பெருமகனாரின் அகத்தையும் முகத்தையும் அமைகக் காட்டுவது போல், அவர் சட்டையில் விளங்கி, “அழகுக்கு அழகு காணீர்” எனச் சொல்லாமல் சொல்லி நின்றதே! “சான்றோர் சான்றோர் பால ராப” என்னும் சங்கச் சான்றோர் சால்புரைக்குச் சான்றாகி நின்றதே அந்த ரோசா!

ரோசா மலரின் நிறமென்ன? அதன் நிறந்தானே ரோசர்! உலகத்திற்கு ரோசா வழங்கிய வண்ணக்கொடை இது! அதன் எண்ணக் கொடைகளைத்தான் எண்ண முடியுமா?

66

“முடிவிலா அழகுடைய ரோசா, முட்செடியிலேயா தோன்ற வேண்டும்? முள்ளில்லாச் செடியில் தோன்றக்கூடாதா?” என்னும் வினா நம்முள் உண்டாதல் இயற்கை. ஆனால் அம்முள்ளின் பயனை எண்ணிப் பார்த்தால் அல்லவா,விந்தையின் விந்தையாய்,வியத்தகு காவலாய்த் திகழ்கின்ற அருமை விளங்கும்!

மெல்லிய தென்றலின் அசைவுக்கும் இதழை உதிர்க்கும் மிக மெல்லிய ரோசாவை, ஆடு மாடு முதலிய விலங்குகள் உரசாமல் விட்டு வைக்குமா? அவை உரசாமை எதனால்? அந்த முள்களால் தானே! இயற்கையின் காவல் கடமையை எண்ணிப் பாராமல் எளிதாகத் தள்ளிவிடலாமா?