உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

இளங்குமரனார் தமிழ்வளம்

18

ரோசாவின் 'முள்' இதனை மட்டும் தானா சொல் கின்றது? “கவர்ச்சி மிக்கதென எதனையும் எண்ணிக் கண்மண் தெரியாமல் போகாதே! அழகு இருக்கும் இடத்தே அல்லலும் இருக்கும்! கவர்ச்சி இருக்கும் இடத்தே கவலைக்குரியதும் இருக்கும்! எச்சரிக்கையாக அணுகு என்கிறது!

ரோசாப்பூ ரோசா வண்ணத்திலே மட்டும்தானா உள்ளது? எத்தனை வண்ணங்கள் வெள்ளை ரோசா-சிவப்புரோசா -மஞ்சள் ரோசா - ஊதா ரோசா- இப்படி எத்தனை வண்ணங்கள் வண்ணங்கள்! வேற்றுமைப் பட்டாலும், எங்களுள் உயர்வும் இல்லை! தாழ்வும் இல்லை! ஏற்றமும் இல்லை! இறக்கமும் இல்லை! நாங்கள்ஓரினம்! ஒருகுலம்! எங்களைப் பாருங்களேன்! வண்ணங்கள் வேற்றுமைப்பட்டால்,அதில் மானுடர் வேற்றுமை ல்லை” என்று தெளியுங்களேன்!” எனத் தெரிவிக்கிறதே அது!

66

66

விதை இல்லாத கனியைக் கருதிப் பார்த்தார் திருவள்ளுவர், ‘காழில் கனி” என்றார் அவர். விதையில்லாக் கனியையும் கண்டு தருகின்றது அறிவியல்! இவ்வாறே முள்ளில்லாத ரோசாவும் வாராதா என்ன? “மாந்தனே! அறிவுக்கு எல்லை இல்லை! அறிவு நாளும் பொழுதும் வளர்ச்சியடைவது! நாம் வளர வளர அதுவும் வளர்வது “அறியுந் தோறும் அறியாமை காணக் கூடியது அறிவு. அத்தகைய அறிவை, அறிவே வடிவாம் இறைவன் அருளியுள்ளான்!. கண்டுபிடி! கண்டுபிடி! மேலும் மேலும் கண்டுபிடி! உன் கண்டுபிடிப்புகளை யெல்லாம் ஆக்கத்திற்கென்றே கண்டுபிடி' என்று ஏவி, வேண்டி நிற்கின்றதே, முள்ளில்லாத ரோசா

66

99

டி

"முள்ளில்லா ரோசாவை நீங்கள் கண்டது இல்லாயா? எனக், குழலும் யாழும் அமிழ்தும் குழைத்த மழலைக் குழந்தையின் அழகு முகம் கேட்கின்றதே! அது முள்ளில்லாத ரோசா இல்லையா! காணார் கேளார் கால்முடமாயோர் பேணா மாந்தர் பிணி நோயுற்றோர் யாவரும் வருக ஆபுத்திரன்கை அமுதசுரபி என்ற புகழும் வேண்டாப் புகழ்ச் செல்வி மணிமேகலையின் அழகு முகம், முள்ளில்லா ரோசா இல்லையா!

-

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளற் பெருமகனார் அழகொழுகும் அருள் முகம் முள்ளில்லாத ரோசா இல்லையா! துறவின் தூய்மையும், அரிமாவின் துணிவும்