உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

இளங்குமரனார் தமிழ்வளம்

18

காதலிலே கரும்பாகக் கருதிய தலைவன், கற்பிலே வேம்பாகக் கருதினானாம் தலைவியை "வேம்பின் ஒண்காய் என்தோழி தரினே தேம்பூங் கட்டி என்றனிர் முன்னே” என்று இடித்துக் கூறித் திருத்துகிறாள் தோழி! கரும்பு வேம்பாதலும், வேம்பு கரும்பாதலும் மனநிலையைப் பொறுத்தது என்னும் காட்சி இது.

நோய் தீர்ப்பதற்குரியது மருந்து: அது கசப்புமிக்கது. அதனை மன இயல் அறிந்த மருத்துவர் எப்படித் தருகின்றனர்? இனிப்புக் கட்டிக்குள் கசப்பு மருந்தை வைத்துத் தருக்கின்றர் தனைக் “கட்டி பூசிக் கடுத்தீற்றல்” என்பது இலக்கணர் வழக்கு! 'வாய்ச் சுவைக்கு இனிக்கட்டும்; நோய்த் தீர்வுக்குக் கசக்கட்டும் என்னும் நுண்ணிய தேர்ச்சியால் கரும்பும் வேம்பும் உடனாகி - ஒன்றாகி- உறவாகி விடுகின்றன! இந்த வேம்புக்கும் கரும்புக்கும் உள்ள பெருமையின் பரப்பு அருமையினும் அருமையாம்!

""

பாண்டியன் மாலை வேப்பம்பூ! அவனே வேம்பன் ஆனான்! வெப்பு வேப்பு - வேம்பு என ஆகியது வேம்பு! வெப்பு-வேப்பு -

வெப்பு நோயாம் அம்மை கண்டுவிட்டால், வேம்பு தலை வாயிலில் தலைநீட்டும்; படுக்கையிலும் தலை வைக்கும்; முழுக்காட்டு நீரிலும் மிதக்கும்! அதன் கொழுந்தை அரைத்துத் தேய்த்தற்கும் முந்தும், சித்திரைப் பிறப்புக்கு ‘வேம்பின் சாறு’ (இரசம்) வைத்தல் நாடு தழுவிய வழக்கம். சிற்றூர் விழாத் தொடக்கத்திற்கு அடையாளம் வேப்பிலைத் தோரணம்! மாரியம்மனுக்குத் தீச்சட்டி எடுப்பார் கையில் திகழ்வது வேப்பந்தலை

வேப்பம் பழத்தை விரும்பித் தின்னும் காக்கையை மறக்கலாமா? வேப்பம் பழத்தைச் சிவந்த வாய்க்குள் வைத்துள்ள கிளியைக் கண்ட புலவன், நங்கை ஒருத்தி தன் பவழ விரல்களில் டையே பொற்காசு ஒன்றை வைத்திருப்பது போன்றுது என்பது எவ்வளவு அழகு! வேம்பே இத்தகைய தென்றால் கரும்பைச் சொல்லி முடியுமா?

கரும்பின் பெயரே அதன் நிறம் கருமை என்பதைக் காட்டும். அதில் செங்கரும்பு, வெள்ளைக் கரும்பு, இராமக் கரும்பு எனப் பலவகை, பேய்க்கரும்பும் உண்டு! பட்டினத்தார் கையில் இருந்து பெருமை கொண்டது அது! சேர்ந்த இடத்தால் அடைந்த சிறப்புக்குச் சான்று அது.