உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் வளம்

31

கார்க்கரும்பின் கமழாலையைக் காட்டுகிறது பட்டினப் பாலை! கரும்பாலையின் வெப்பமும் புகையும் நீர்ச் செறுவின் நீள் நெய்தல் பூவை வாட வைப்பதையும் பாடிவைக்கிறது அப் பட்டினப்பாலை! நுனிக் கரும்பில் இருந்து தின்பதை நல்லோர் நட்புக்கும், அடிக்கரும்பில் இருந்து தின்பதை அல்லோர் நட்புக்கும் உவமை காட்டுகிறது நாலடி. அதே நாலடி கரும்பை ஆட்டிக்கட்டிக் கொண்டவர், சக்கை எரிவதைப் பற்றிக் கவலைப் படார்; அவ்வாறே காலத்திலேயே அறத்தைச் செய்தவர்’ இறப்புக்குக் கவலைப்படார் என்றும் கூறுகிறது. சொல்லப் பயன்படுவர் சான்றோர்; கரும்புபோல் ஆட்டினால்தான் பயன்படுவர் கீழோர் என்றார் திருவள்ளுவர். "கசப்பான செய்தியைக் கூட இனிப்பாகச் சொல்லலாமே" என்பதை, இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந்தற்று என்கிறதே குறள்!

L

66

.

“கரும்பின் இனிமையினும் இனியன் இறைவன் என்பதை எத்தனை பாடல்கள் கூறுகின்றன! “கடியாமல் சுவைக்கின்ற கரும்பு" என இறைவனைக் குறிக்கிறாரே வள்ளலார்! கரும்பு வில்லையுடையவன் காமன் என்பதில் உள்ள உள்ளுறை,

எவ்வளவு ஆழமானது!

முரண்போல் தோன்றுவன, எவ்வளவு இணைந்தவையாகி விடுகின்றன! எதிரிடைகளை இணைத்துப் பார்க்கும் பார்வை என்றும் வேம்பாகக் கசப்பதில்லை! கரும்பாகவே இனிக்கும்!

மரம், செடி, கொடி, புல், பூண்டு, ஆகியவற்றின் அடிமூலம் வேர், மண்ணுள் மறைந்து கிடக்கும் வேரே, மண்ணுக்கு மேலேயுள்ள தண்டு முதலிய பகுதிகளையெல்லாம் தாங்கிக் கொண்டுள்ளது! கண்ணில் கட்டுப் படாமலே தன் கடனாற்றும் வேர், புகழையும் விரும்பாப் புகழாளராய்க் கடமை புரிவார்க்கு எடுத்துக் காட்டாம்

கிளையில் இருந்து கிளைத்துக் கீழே ஊன்றி நிற்பது வீழ்து! நீர் வீழ்ச்சியைக் காண்பவர் இவ்வோர் வீழ்ச்சியை ஒப்பிட்டு இன்புறுவர்! பொழுது போழ்து ஆவது போல் விழுது வீழ்து ஆகும்! "வேரும் வீழ்தும்" வேறு வேறானவையா? இல்லை! இரண்டும் வேர்களே என்பது அறிவியல்

நிலத்தின் உள்ளே மறைந்திருந்தால் என்ன, நிலத்திற்கு மேலே வெளிப்பட்டிருந்தால் என்ன, பயிரைப் பாதுகாக்கும்