உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் வாழ்வியல் இலக்கணம்

83

காப்பியர் (1152). தலைவி தோழிக்கு அறத்தொடு நிற்றல் முதலாகச் சொல்லப்படுவன அவை. அதனாலேயே வள்ளுவம் “அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை” என இல்வாழ்வில் முழங்கியது.

அக வொழுக்கம் பற்றிக் கூறப்புகும் ஆசிரியர் நல்ல சூழலை முதற்கண் உருவாக்கிக் கொள்கிறார்.

தமிழர் கண்ட அகவொழுக்கம் 'கைகோள்' எனப்பட்டது. கை என்பதன் பொருள், ஒழுக்கம். கோள், கொள்ளுதல்; அக் கைகோள் களவு, கற்பு என இரண்டாம். களவில் தொடங்கிக் கற்பில் நிறைவுறல் அன்றி வழுவுதல் ஆகாது என்னும் வரையறை உடையது அக் கைகோள்.

கைகோள் தோன்றுமிடம் அல்லது தொடங்குநிலை, 'கைக்கிளை எனப்பட்டது. ஒழுக்கம் கிளைக்கும் நிலையே கைக்கிளை என்க.

கணவனை இழந்த தாபத நிலை, பின்னாளில் ‘கைம்மை’ என வழங்கியமை கட்ட மை ஒழுக்கப் பொருளிலேயே என்பது எண்ணத் தக்கது.)

ஏழு திணை

கைக்கிளையில் தொடங்கும் காதல் வாழ்வு, மேலே ஐந்திணை (குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை) பெருந்திணை என ஏழு திணைகளாக வகுத்துக் கூறப்படுவதை முதல் இயல் முதல் நூற்பாவில் சுட்டுகிறார். அது,

"கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய் முற்படக் கிளந்த எழுதிணை என்ப்”

(947)

என்பது. கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய் என்றமையால், 'நடுவண் ஐந்திணை' உண்மையைக் குறிக்கிறார் (948).

நிலம்

தமிழ் நிலம் 'நானிலம்' என்னும் பகுப்புடையது. அந் நானிலம் குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் என்பன.

குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் எனப்படும் நிலைத்திணை (தாவரம்) வளமாக வளரும் இடத்தை த்தை அந் நிலைத்திணையின் பெயராலேயே வழங்கினர்! நிலைத்திணைகளில் பொலிவுமிக்கதும் உள்ளம் கவர்வதும் பூ. ஆதலால் நிலைத்திணைப் பூப் பெயரே அகம், புறம் இரண்டற்கும் அடையாளம் ஆயின.

நடுவண் ஐந்திணையுள் நடுவண் திணையாகப் பாலையைக் கொள்கிறார் தொல்காப்பியர். அதனால், அத்திணை ஒழிந்த திணைகள் நான்கற்கும் நானிலங்களை வழங்குகிறார். பாலை என்பது பால்மரம். அது