உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் வாழ்வியல் இலக்கணம்

145

"குடிப்பிறப் புடுத்துப் பனுவல் சூடி

விழுப்பேர் ஒழுக்கம் பூண்டு காமுற

வாய்மைவாய் மடுத்து மாந்தித் தூய்மையின்

காதல்இன் பத்துள் தங்கித் தீதறு

நடுநிலை நெடுநகர் வைகி வைகலும்

அழுக்காறின்மை அவாவின்மை என்றாங்கு

இருபெரு நிதியமும் ஒருதாம் ஈட்டும்

தோலா நாவின் மேலோர் பேரவை”

என்று அவ்வவையத்தைக் கூறும் ஆசிரியமாலை. அவ்வவையில் ஒருநாள் அளவேனும் தங்குதற்கு வாய்ப்பின், பலப்பல பிறப்புத் துயர்களையும் படலாம் என்பதை,

"உடனமர் இருக்கை ஒருநாட் பெறுமெனின்

6

பெறுகதில் அம்ம யாமே வரன்முறைத்

தோன்றுவழித் தோன்றுவழிப் புலவுப் பொதிந்து

நின்றுழி நின்றுழி ஞாங்கர் நில்லாது

நிலையழியாக்கை வாய்ப்ப இம்

மலர்தலை உலகத்துக் கொட்கும் பிறப்பே”

என்று கூறி முடிக்கின்றது.

குடிப்பிறப்பு, உடை; நூல் சூடும்பூ; ஒழுக்கம், அணிகலம்; வாய்மை, ஊண்; தூயகாதல், உறைவிடம்; நடுவுநிலை, நகர்; அழுக்காறு இல்லாமை, அவா இல்லாமை, செல்வம்; இவற்றையுடையவர் தோலா (தோல்வியுறாத, பொய்க்காத) நாவின் மேலோர். இத்தகும் அவையம் ஒன்றை எண்ணிய அளவிலேயே எத்தகைய பெருமிதம் உண்டாகின்றது! அவர்கள், தகுதி இல்லார் வரினும் அவரைத் தகுதியராக்கிக் கொள்ளுதல் இன்றித் தள்ளுதல் இல்லார் என்னும் சிறப்பினர் ஆதலால்தான், எந்நிலத்தாரும் எக் குடியாரும் எத் தொழிலாரும் ஆடவர் பெண்டிர் என்னும் பால்வேறுபாடும் இல்லாமல் புலமைச் செல்வராகத் திகழ்ந்தனர் என்பது சங்கச் சான்றோர் பெயர்ப்பட்டியலைப் புரட்டிய அளவானே புலப்படும்.

இந்நிலை தாழ்ந்து தடம் புரண்டமை,

தன்மகன், ஆசான்மகன், பொருட் கொடையன் முதலோர்க்குக் கற்பித்தலும், களி, மடி, மானி, கள்வன், பிணியன், ஏழை, பிணக்கன், சினத்தன், தொன்னூற் கஞ்சித் தடுமாறுளத்தன், தறுகணன் பாவி, படிறன், இன்னோர்க்குக் கற்பித்தல் ஆகாமையும், கற்பிப்போன் கருத்தாகி விட்டதை வெளிப்படுத்தும் நன்னூல் கொண்டு தெளியலாம்.

நோயுள்ளவனுக்குத் தானே மருத்துவன் உதவி வேண்டும்! நோயனை நெருங்க விடேன் என்பான், மருத்துவன் என்னும் பெயர்க் குத் தானும் உரிமையன் ஆவனா?