உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

நாலடியார்,

இளங்குமரனார் தமிழ்வளம் - 19

யார், இளமை நிலையாமை யாக்கை நிலையாமை செல்வம் நிலையாமை என்னும் நிலையாமைகளை முதற்கண் கூற, திருக்குறளோ ா படிமான வளர் முறையில் தொல்காப்பிய நெறி போற்றி இல்லற முதிர்வில் அருளுடைமை தொடங்கி வெகுளாமை, இன்னாசெய்யாமை, கொல் லாமை, நிலையாமை, துறவு, மெய்யுணர்தல், அவாவறுத்தல் என வரிசைப் படுத்தியமை உணர்ந்து போற்றத்தக்கது.

கணவன் இறக்க மனைவியும் ‘மூதானந்தம்’.

காதலியை இழந்தமை ‘தபுதாரம்’

காதலனை இழந்தமை ‘தாபதம்’

உணர்வொன்றி இறத்தல்

கணவனொடு மனைவி தீப்புகுதல் ‘முதுபாலை’

அமர் மேம்பட்டு அமரனாகிய மகனொடு முடியும் தாய் நிலை 'தலைப்பெயல் நிலை'

எவரெவர் முடிந்து சென்றாலும் முடிந்து போகாமல் கிடக்கும் சுடு - இடுகாட்டினை வாழ்த்தும் வாழ்த்து 'காடு வாழ்த்து’

இன்னவை காஞ்சித் திணைத் துறைகளுள் சில.

பாடாண் திணை

LITL ாண் திணை என்னும் புறத்திணை, கைக்கிளை என்னும் அகத்திணைக்குப் புறனாகும்.

கைக்கிளையின் ஒருபாற் கூற்றுப் போண்றதே, புரவலர்ப்புகழும் புகழ்ச்சி ஆதலின், அதன் புறன் ஆயிற்று.

66

“அமரர்கண் முடியும் அறுவகை யானும்

புரைதீர் காமம் புல்லிய வகையினும்

ஒன்றன் பகுதி ஒன்றும் என்ப”

என்பது பாடாண் பற்றிய இலக்கணத்தின் ஒருபகுதி.

அமரர்கண் என்றதும் பழைய உரைகாரர்கள் விண்ணேறித் தேடினர். மண்ணின் மக்களுக்கு மண்ணின் மைந்தரால் தந்த மண்வள நூல் என்பதை மறந்து விட்டனர். எனினும் எண்ணெயும் உண்மையும் இறுதியில் மேல் மிதக்கும் என்பதுபோல் நாவலர் பாரதியார் வழியாக உண்மை கண்டது தமிழ் உலகம். தொடர்ந்து குழப்புவதே குறியாகி எழுதினாரும் உளர் எனினும் தகவுரையை ஏற்றுப் போற்றினாரும் உளர் என்பது தொல்காப்பியத் தோன்றல் பேரா. இலக்குவனார், பேரா. வெள்ளை வாரணனார் முதலியவர்களால் வெளிப்பட்டது.