உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

தமிழர் வாழ்வியல் இலக்கணம்

149

அமரர் என்னும் சொல் அமர் என்பதன் அடியாகப்பிறந்த பெயராய்ப் போர் செய்தலையே தமக்குரிய தொழிலாகக் கொண்டு வாழும் வீரரைக் குறித்து வழங்கும் தனித் தமிழ்ச் சொல்லாம்'

"போர் மறவர்பாற் சென்று அமைவனவாக முன் இவ்வியலில் விரித்து விளக்கிய வெட்சி முதல் காஞ்சி யீறான புறத்திணை வகைபற்றிய ஆறுமே அமரர்கண் முடியும் அறுவகை எனப்பட்டன என்பார் நாவலர் சோம சுந்தர பாரதியார். இக் கருத்தே ஆசிரியர் தொல்காப்பியனார் கூற்றுக்கும் சங்கத்தொகை நூல்களாகிய தமிழ்ச் செய்யுட்களின் அமைப்புக்கும் ஏற்றதாகும்” என்பார் வெள்ளைவாரணர் (தொல் காப்பியம்; தமிழிலக்கிய வரலாறு பக்.108-9).

பாடாண் துறையில் இயற்பாவொடு இசைப்பாவும் (வண்ணமும்) வரப்பெறல் உண்டு. தலைவனை முற்படுத்திப் பாடாண்பாடும் புலவர் தம்மைச் சார்ந்தாரை உட்படுத்தி, 'வண்ணம் பாடுவம்' என்பது கண்கூடு. மக்கட் காதல் பாட்டு, தெய்வக் காதல் பாட்டாகவும் வரும்

என்பதை,

"காமப் பகுதி கடவுளும் வரையார்"

என்பதன் வழியே சுட்டுவார் ஆசிரியர் (1029). தேவார, திருவாசக, திருவாய் மொழி முதலாம் இறைநூல்களிலும் கோவை நூல்களிலும் இக் காதல்

பாக்களைக் காணலாம்.

குழந்தைகள் மீது கொண்ட பேரன்பால் பாடுதலும் உண்டு. ஆழ்வாரின் கண்ணன் பிள்ளைத் தமிழும், பாரதியாரின் கண்ணன் பாட்டும், பிள்ளைத் தமிழ் நூல்களும் இதன் விரிவாக்கமாம். காதல் தழுவிய இப் இ பாடல்களில் ஊரும் பேரும் பிறசிறப்பும் கூறுதல் உண்டு. ஏனெனில் அகப் பாடலில் அவ்வுரிமை இல்லை ஆதலால், இதனைக் குறிப்பிட்டுக் காட்டினார் (1031). இவையெல்லாம் வழக்கொடு கூடியவை என்பதை, “வழக்கொடு சிவணிய வகைமை யான” என்றார் (1032,1033).

கடவுள் வாழ்த்துப் பாடும் வழக்கம் பண்டே இருந்தமையாலும், அவ் வாழ்த்துடன் தொடர்புடையவை சில வாழ்த்தப் பெற்றமையாலும் அவற்றைத் தொகுத்து வாழ்த்தினை நான்காக்கிக் கூறினார்.

“கொடிநிலை கந்தழி வள்ளி என்ற வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே

என்பது அது (1034).

கொடிநிலை கந்தழி வள்ளி என்பவை குற்றமற்ற சிறப்பினவை. இவை மூன்றும் கடவுள் வாழ்த்தொடு பொருந்தி வருவன என்பது இதன் பொருள்.