உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238

இளங்குமரனார் தமிழ்வளம் - 19

ஆற்றூர்க் கல்வெட்டு மற்றொன்றில் சேனாவரையர்க்கு ‘அழகப் பிரான் இடைக்கரையாழ்வான்' என்றொரு பெயருண்மை கொண்டு அப்பெயரே சேனாவரையரின் இயற்பெயராக இருக்கக் கூடும் என்பர்.

சேனாவரையர் உரையாசிரியர் இளம்பூரணர் உரையைப் பல இடங்களில் குறிப்பிடுகிறார். நேமிநாதம் இயற்றிய குணவீர பண்டிதர் நன்னூல் இயற்றிய பவணந்தி முனிவர் ஆகியோர் கொள்கைகளை மறுத்துரைக்கும் இடங்களும் இவர் நூலில் உள. ஆதலால், அவர்களுக்குக் காலத்தால் பிற்பட்டவர் இவர் என்பது உறுதியாகும்.

L

‘மாறோகம்’ என்பது பழமையானதோர் ஊர். அவ்வூர்ப் புலவர் 'மாறோகத்து நப்பசலையார்' என்பார் சங்கச் சான்றோர் வரிசையைச் சார்ந்தவர். அம் மாறோகம் கொற்கை சூழ்ந்த பகுதியாகும். அதன் வழக்கம் ஒன்றைச் சேனாவரையர் தம் உரையுள் எடுத்தாள்கிறார். அதிலும் இக்காலத்தும்' என நிகழ் காலத்தால் சுட்டுகிறார். தம் ஊர்ச்சார்புச் செய்தியாக விளங்குகின்ற அது, “புறத்துப்போய் விளையாடும் பேதைப் பருவத்துப் பெண்மகளை மாறோக்கத்தார் இக்காலத்தும் பெண்மகன் என்று வழங்குப்" என்பது (164).

“தென்பாண்டி நாட்டார் ஆ எருமை என்பவற்றைப் பெற்றம் என்றும், தம்மாமி என்பதனைத் ‘தந்துவை' என்றும் வழங்குப" என்றும் (400), நாட்டைச் சுட்டி எடுத்துக்காட்டுக் காட்டும் இப்பகுதியும் இவர்தம் நாட்டுச் சார்புக்குரிய சான்றாகக் கொள்ள வாய்க்கின்றது.

சமயம்

ஆற்றூர்ச் சேனாவரையர் அவ்வூர்ச் சோமநாதர் கோயிலுக்கு நிலம் வழங்கிய செய்தியால் அவர் சைவ சமயத்தவர் என்பது தெளிவாம். மேலும் பிறர் உரைகளின் முகப்பில் இறைவணக்கப் பாடல்கள் இல்லாதிருக்கவும் இவருரை முகப்பில் பிள்ளையார், சிவபெருமான், கலைமகள், அகத்தியர் ஆகியோரைப் பற்றிய வாழ்த்துப் பாடல்கள் அமைந்துள்ளமை இவர்தம் சமயச்சார்பை விளக்கும். இளம்பூரணர் தொல்பொருள். ஐம்பதாம் நூற்பாவில் மேற்கோள் காட்டும், “தன்தோள் நான்கின்” என்னும் மூத்த பிள்ளையார் பாடலை இவர்தம் உரை நூன் முகப்புப் பாட ல கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்க ஒன்றாம்.

லாகக்

சேனாவரையர் உரை சொல்லதிகாரம் ஒன்றற்கே கிடைத்துள்ளது. மற்றை அதிகாரங்களுக்கு இவர் உரை எழுதினார் என்பதற்குரிய சான்று இவர் உரையிலோ பிற வகைகளிலோ கிட்டிற்றில்லை. ஆனால் எழுத்து, பொருள் அதிகாரங்களில் இவர் கொண்டிருந்த புலமை நலம் சொல் லதிகார உரையால் விளக்கமாகின்றது.