உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250

இளங்குமரனார் தமிழ்வளம் – 19

"ஓசை எனினும், அரவம் எனினும், இசை எனினும், ஒலி எனினும் எழுத்தானாம் ஓசைக்கும் எழுத்தல் ஓசைக்கும் பொது கிளவி எனினும் மாற்றம் எனினும் மொழி எனினும் இவையெல்லாம் எழுத்தொடு புணர்ந்து பொருள் அறிவுறுக்கும் ஓசைமேல் நிற்கும்” என்றும் (1),

“சேரி என்பது பலகுடியும் சேர்ந்திருப்பது. தோட்டம் என்பது பலபொருளும் தொக்கு நின்ற இடம்” என்றும் (49) கூறுகிறார். முன்னதில் ஒருபொருட் பன்மொழிகளைத் தொகுத்துரைப்பதும், பின்னதில் தோடு (தொகுதி) என்னும் வேர்ப்பொருள் உணர்ந்து கூறுவதும் அவர்தம் பொருள் விளக்கச் சிறப்பைப் புலப்படுத்தும். “எல்லாச் சொல்லும்” என்பதற்குத் தமிழ் இலக்கணம் கூறும் நூலாகலின் தமிழ்ச் சொல்லே சுட்டப்படுவது எனத் தெரியப் பெறுமாயினும் நன்கு விளங்குமாறு ‘தமிழ்ச்சொல் எல்லாம்' என்று இவர் உரைப்பது (158) குறிப்பிடத்தக்கது.

உரைநயம்

முயற்கோடு,ஆமை மயிர்க் கம்பலம் என்பவை இன்மைப் பொருள். இவற்றுடன் “அம்மிப்பித்தும் துன்னூசிக்குடரும்” என இவர் இயைத்துக் கொள்வது (34) சுவை மிக்கது. ‘ஏமாளி கோமாளி' என்பவை இன்றும் வழக்கில் உள்ளவை. இவர் ‘ஏமாள் கோமாள்' என்கிறார் (148). கன்று என்பது ‘பூங்கன்று' என வருதலைச் சுட்டுகிறார் (55).

"கலம் - சாத்தனது கலம்; கலம் என்பதனை ஒற்றிக் கலத்தின் மேற் கொள்க. பிற கலத்தின்மேற் கொள்ளாமைக் காரணம் என்னை எனின் இஃதொரு பொருள் இருவர்க்குடைமையாக நிற்கும் வேறுபட்டதாகலின் என்க. இஃது உரையிற் கோடல்” என்று இவர் தரும் விளக்கம் புதுவது.

66

'காடன்,நாடன்” என்பவற்றுக்குக் “காடி, நாடி" எனப் பெண்பால் கூறுவதும் (177), “உழுது கிழுது" (235) என்பதும் புதுமைய. நன்னூலார் டைப்பிறவரல்' என்பதை இவர் 'இடைக் கிடப்பு' என்பதும் அது.

வினையெச்ச வாய்பாடுகளின் வைப்பு முறையைக் கூறும் இவர் “செய்து என்பது முதலாகச் செய்தென என்பது ஈறாக அந்நான்கும் இறந்தகாலத்தவாகலான் முன்னே உடன் வைக்கப்பட்டன. அவற்றுள், செய்து என்பது பெருவழக்கிற்று ஆகலின் அவற்றுள்ளும் முன் வைக்கப்பட்ட து (230) என்பது முதலாகக் கூறுவதும், பிறிது பிறிது இடங்களில் இவ்வாறே விரித்துரைப்பதும் ஆசிரியர் வைப்புமுறைச் சிறப்பை வெளிப்படுத்துவனவாம்.

ஒரு சூத்திரப் பொருளை வேறொரு சூத்திரத்தால் பெற வாய்ப் பிருந்தும் ஆசிரியர் மீண்டும் கூறுதலைக் கூறியது கூறலாகக் குறை காணாமல், “மாணாக்கனை நன்கு தெளிவித்தற் பொருட்டுக் கூறினார்" என நிறையாக்குகின்றார் (117).