உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் வாழ்வியல் இலக்கணம்

251

சில இடங்களில் இவர் உரைக்கும் வேறுபாடுகள் சுவையானவை. 'பொற்றொடி' என்பதை இரு பெயரொட்டுக்கு எடுத்துக்காட்டும் இவர் "இஃது அன்மொழித் தொகையன்றோ எனின், படுத்தலோசை பட்டவழி அன்மொழித் தொகையாம்; எடுத்தலோசை பட்டவழி ஆகுபெய ராகும்” என்கிறார்.

காலங்குறித்த பல்லோர் மதங்களைத் திரட்டிக்கூறும் இவர், “காலம் தன்னை மூன்று என்பாரும் தொழிலாவது பொருளினது புடைபெயர்ச்சி யாகலின் அஃது ஒரு கணம் நிற்பதல்லது இரண்டு கணம் நில்லாமையின் நிகழ்ச்சி என்பதொன்று இல்லை; ஆதலின், இறப்பும் எதிர்வும் எனக்காலம் இரண்டே என்பாரும், நிகழ்காலம் என்ற ஒன்றுமே உண்டு என்பாரும் எனப்பல மதம் உண்டு என்பது அறிவிக்கப்பட்டது” என்பது தம் உரையைக் கற்பார் பல்லோர் உரைகற்ற பயனை அடை ய வேண்டும் என்னும் எண்ணத்துடன் எழுதினார் என்பது புலப்படுகின்றது.

6