உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் வாழ்வியல் இலக்கணம்

253

கல்லாடனார் காலம் நச்சினார்க்கினியர்க்கும் பிற்பட்டது ஆகலானும் இவர் 16 ஆம் நூற்றாண்டினர் ஆகலாம்.

சமயம்

"மன்னாப் பொருளும் அன்ன இயற்றே" என்னும் நூற்பா விளக்கத்தில் (32) “வேதாகமத் துணிவு ஒருவர்க்கு உணர்த்துமிடத்து, உலகும் உயிரும் பரமும் அனாதி; பதியும் பாசமும் அனாதி எனவரும். உலகும் உயிரும் பரமும் பசுவும் பொருந்தும் பொருள் ஆனவாறும் பாசமும் பதியும் இவற்றோடு பொருந்தாத பொருள் ஆனவாறும் காண்க என்பதும், “மந்திரப் பொருள் வயின் ஆஅகுநவும்” என்பதற்கு (439), "மண்ணைச் சுமந்தவன் தானும் வரதராசன் மகன்றானும்

எண்ணிய வரகாலி மூன்றும் இரண்டு மரமும் ஓர்யாறும் திண்ணமறிய வல்லார்க்குச் சிவகதியைப் பெறலாமே

என்பதை எடுத்துக்காட்டி “இதனுள் மண்ணைச் சுமந்தவன் - ந, வரதராசன் மகன் - ம, வரகாலி மூன்று - சி, இரண்டு மரம் - வா, ஓர்யாறு - ய, எனக்கூற 'நமச்சிவாய' எனப் பொருளாயிற்று என்று குறிப்பதும் கொண்டு இவர் வைதிகம் சார்ந்த சைவ சமயத்தர் எனக் கருதலாம்.

உரைநிலை

இவர், 'க கடாவி ாவிடை யுள்ளுறுத்து' முதல் நூற்பாவுக்கு உரை விரிக்கிறார். அதன் நிறைவில் “இனி இச்சூத்திரத்திற்குப் பிறவாற்றானும் கடாவிடையுள்ளுறுத்து உரைப்பிற் பெருகும்” என அமைகிறார். எனினும் இவருரை காண்டிகை யுரையினும் விரிவுரையாகவே செல்கின்றது.

தமிழ் வழக்காற்றை இவர் ‘தமிழ்நடை' என்கிறார் (2, 243); காலம் உலகம் எனவரும் நூற்பாவில் வரும் (56) “சொல்” என்பதற்கு வேதம் எனப் பொருள் செய்கிறார். “சொல் என்பது எழுத்தினான் இயன்று பொருள் உணர்வது. அச்சொல்லினான் இயன்ற மந்திரம், விடம் முதலாயின தீர்த்தலின் தெய்வம் ஆயிற்று. இந்நூல் செய்தான் வைதிக முனிவர் ஆதலின் சொல்லென்பது ‘வேதம்' என்று கொள்ளப்படும்” என்கிறார். இவர் தொல் காப்பியரை வைதிக முனிவர் என்று கொண்டதால் அக்கொள்கைக்கு ஏற்ப உரை செய்யத் துணிகிறார்.

வடசொல்

“எல்லா நாட்டிற்கும் பொதுவாயினும் வடநாட்டிற் பயில வழங்கு தலின் வடசொல் ஆயிற்று. வடசொல் என்றதனால் தேயவழக்காகிய பாகதச் சொல்லாகி வந்தனவும் கொள்க.

வடமொழியாவன: வாரி, மணி, குங்குமம் என்னும் தொடக்கத்தன. வட்டம் நட்டம் பட்டினம் என்பன பாகதம்” என்கிறார் (397).