உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254

இளங்குமரனார் தமிழ்வளம் – 19

ஒருவினை ஒடுச்சொல் என்னும் நூற்பா உரையில் (88), பிற உரையாசிரியர்களின் கருத்துக்கு மாறுபடும் இவர் "இப்பொருள் பாணினி யார்க்கும் ஒக்கும்” எனத் தமக்குச் சார்பு காட்டுகிறார். ஒரு சார் ஆசிரியர் வேற்றுமை ஏழெனக் கொண்டதையும் குறிக்கிறார் (150).

ஆசிரியர் சிறப்பு

66

‘ஆஅய்' என யகர ஈறு விளி ஏற்றதால் எனின் அவ்வாறு வருவன வழக்குப் பயிற்சியின்மையின் எடுத்தோதிற்றிலர்" என்று அமைதி காட்டும் இவர் அதிகாரப் புறநடையால் கொள்ள ஏவுகிறார் (150).

இடைச்சொல் உரிச்சொல் ஆகியவை பொருண்மை நிலையில் வரும் வகையை ஆசிரியர் விரித்துரையாமையை எண்ணும் இவர், "பொருண்மை நிலை வழக்கினும் சான்றோர் செய்யுளகத்தும் பயின்று வருதலானும் இவ்வழக்குத் தமிழ்நாட்டுப் பிறந்து தமிழறிவாரை நோக்குதலினாலும் இலக்கணம் இன்றியும் பாகம் உணர்வார் ஆகலானும் எடுத்து ஓதாராயினர். அஃது அற்றாதல், 'வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா, வெளிப்பட வாரா உரிச்சொன் மேன' என ஓதிய அதனானும் கொள்க. சொன்மை நிலை இலக்கணம் இல்வழி உணர்வரிது ஆதலான் எடுத்து ஓதப்பட்டது” (155) என்கிறார். இத்தகையவை ஆசிரியர் சிறப்பியல்

காட்டுவனவாம்.

உவமை

66

வலனாக என்னும் எச்சத்துக்கண் ஆக என்பது க என்பது செய்யுள் விகாரத்தால் தொக்கு நின்றது. தொக்கு நின்ற காலத்தும் அதற்கு இயல்பு முற்பட்ட நிலைமை என்று கொள்க. என்போலவோ எனின், வாலும் செவியும் இழந்த ஞமலியைப் பின்னும் ஞமலி என்றே வழங்கினாற் போல” எனச் சுவைமிக்க வகையில் உவமைப் படுத்துகின்றார் (408). பூத்தொடை யொடு சொற்றொடையையும் விரிய விளக்குகின்றார் (408).

“எழுத்துப் பிரிந்திசைத்தல் இவணியல் பின்றே” என்பதன் உரையில் 'இத்தமிழகத்தில் இல்லை” என்கிறார் (391).

தமிழ்நாடு

செந்தமிழ் நாட்டு எல்லை குறித்து இவர் கூறும் கருத்து பிறரினும் தெளிவும் திருத்தமும் உடையதாம். பிறருரைகள் சோழ நாடே செந்தமிழ் நாடு என்பது சொல்ல இவர், "செந்தமிழ் நாடாவது வையையாற்றின் வடக்கும் மருதயாற்றின் தெற்கும், கருவூரின் கிழக்கும் மருவூரின் மேற்கும் என்ப.இவ்வாறு உரைத்தற்கு ஓர் இலக்கணம் காணாமையானும் வையை யாற்றின் தெற்காகிய கொற்கையும் கருவூரின் மேற்காகிய கொடுங் கோளூரும் மருதயாற்றின் வடக்காகிய காஞ்சியும் தமிழ் திரி நிலமாதல்