உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் வாழ்வியல் இலக்கணம்

255

வேண்டுமாதலானும் அஃது உரையன்று என்பார் உரைக்குமாறு என்று வரைந்து வடவேங்கடந் தென்குமரி ஆயிடைத்தமிழ் கூறு நல்லுலகமே செந்தமிழ் நிலம்” என்கிறார் (394).

பழங்கொல்லம் கடல் கொள்ளப் பட்டபின், இப்பொழுதுள்ள கொல்லத்தை “அப்பெயரானே கொல்லமெனக் குடியேறினார் போலும்” என்கிறார் (396).

உரைநலம்

சில இடங்களில் இவர் தரும் விளக்கமும் எடுத்துக் காட்டும் நினைதோறும் இன்பம் பயப்பனவாம். முன்னவர் உரைகளைத் தழுவியும் சார்ந்தும் பின்னவர் உரைகாண்பதும் காட்டுவதும் வழக்கெனினும், அப்பின்னவர் உரைகளால் முன்னவர் விளக்காத பகுதிகள் விளக்கம் பெறுவதும், சிக்கல்கள் அவிழ்க்கப்படுவதும் பட்டறிவால் ஏற்படுவன. அவ்வகையில் தெய்வச்சிலையார் தனிச்சிறப்புக்குரியவராகச் சொல்லத் தக்கவர்.

'உண்டு' என்பதைப் பொதுவினை என்றும், சிறப்பு வினை என்றும் இருவேறு வகையாகக் கொள்வர் உரையாசிரியர்கள். இவர் தக்க எடுத்துக் காட்டுகளின் வழியே பொதுவினை என்பதை நிலைப்படுத்துகிறார். அது முன்னை உரையாசிரியர்களின் தோள்மேல் அமர்ந்து பார்க்கும் பார்வை யின் விளைவாம்.

“ஊன் துவை, கறிசோ றுண்டு வருந்து தொழில் அல்லது, பிறிது தொழில் அறியா வாகலின் (புறநா.14) என்ற வழி உண்டு என ஒரு வினை யான் வந்ததால் எனின், அது பொதுவினை என்று கொள்க. என்னை? 'உண்ணு நீர் வேட்டேன் என வந்தாற்கு' (கலி. குறி. 15) எனவும், 'பாலும் உண்ணாள் பழங்கண்கொண்டு' (அகம். 48) எனவும், 'கலைப்புற வல்குல் கழுகு குடைந்துண்டு' (மணிமே. 6:112) எனவும், 'கள்ளுண்ணாப் போழ்து’ (திருக். 930) எனவும், ‘உண்ணாமை வேண்டும் புலாஅல்' (திருக். 257) எனவும் வருதலின்” என்று எடுத்துக்காட்டி ‘உண்டு' என்பது உண்ணல், கறித்தல், குடித்தல், சுவைத்தல் முதலிய பலவற்றுக்கும் வரும் பொது வினையாதலை விளக்குகின்றார் (45).

6

து

‘குறித்தோன் கூற்றம் தெரித்து மொழி கிளவி' என்பதற்குச் ‘சேவலை' எடுத்துக்காட்டுகிறார் (54). அதில், “நிவந்தோங் குயர்கொடிச் சேவலோய்' (பரிபா. 3:18) என்ற வழிச் சொல்லுவான் குறிப்பு மாயவனை நோக்கலிற் கருடனாயிற்று. 'சேவலங் கொடியோன் காப்ப' (குறுந். 1) என்ற வழிச் சொல்லுவான் குறிப்பு முருகவேளை நோக்குதலிற் கோழியாயிற்று" என்கிறார். இத்தகும் இணைப்புச் சான்றுகள் தெய்வச்சிலையார் கொண்டிருந்த இலக்கியப் பயிற்சியின் பரப்பை வெளிப்படக் காட்டுவன.