உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256

இளங்குமரனார் தமிழ்வளம் - 19

வேற்றுமைகள் அனைத்தும் முறையே வருமாறு இவர் காட்டும்,

"காதலியைக் கொண்டு கவுந்தியொடு கூடி

மாதரிக்குக் காட்டி மனையின் அகன்று போய்க்

கோதில் இறைவனது கூடற்கண் கோவலன்சென்

றேத முறுதல் வினை

என்னும் இன்னிசை வெண்பா எடுத்த இலக்கணத்திற்கு எடுத்துக்காட்டாவ துடன் சிலப்பதிகாரச் செய்திச் சுருக்கமாகவும் அமைந்து சுவை பயக் கின்றது.

பாடம்

"விழுமம் சீர்மையும் இடும்பையும் செய்யும்

என இளம்பூரணரும்,

"விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும்

எனச் சேனாவரையரும் நச்சினார்க்கினியரும் பாடம் கொண்ட அதனை இவர்,

"விழுமம்,

சீர்மையும் சிறப்பும் இடும்பையும் சிறப்பும்

22

னர்.

எனப் பாடங்கொள்கிறார். இப்பாடம், இரு சார் கருத்தையும் ஏற்றுக் கொண்டு இவரே அமைத்துக் கொண்டதாகலாம் (349). அத்தகு கருத்துடையர் இவர் என்பது வினைமுற்றைப் பற்றி இவர் கொண்ட கருத்தினால் வலியுறும்.

“வினைச்சொற்கள் முற்றும் பெயரெச்சமும் வினையெச்சமும் என மூவகைப்படும். அவற்றுட் பெயரெச்சம் வினையெச்சம் என்பன இத் தன்மையன என்று எடுத்தோதி முற்றுச் சொல்லாவது இத்தன்மையது என்று ஓதிற்றிலர். அதற்கு இலக்கணம் யாங்குப் பெறுதும் எனின், எச்சவியலுட் பெறுதும். வினைக்கு இன்றியமையாத முற்றினை ஒழிபியல் கூறுகின்றுழிக் கூறிய அதனாற் பெற்ற தென்னை எனின், அஃது எனக்குப் புலனாயிற்றன்று. இஃதேல் வினையிலக்கணம் அறிந்தேன் ஆகுங்கால் முற்றிலக்கணமும் அறிதல் வேண்டும் அன்றே. அதனை ஆண்டுக் கூறியவாறு ஈண்டுரைத்தல் வேண்டும் எனின் உரைக்குமாறு” என்று கூறி வினைமுற்றுப் பற்றிய மூன்று நூற்பாக்களையும் காட்டி உரை வரை கின்றார். இவ்வகையால் இடப்பெயர்ச்சி செய்தாருள் முதல்வரெனத் தெய்வச்சிலையார் அமைந்து விடுகின்றார்.

இவ்விடப் பெயர்ச்சியிலும் பெயர்ச்சி வேண்டினார் விளக்கவுரை கண்ட கு. சுந்தரமூர்த்தியார்: