உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

தமிழர் வாழ்வியல் இலக்கணம்

257

இங்ஙனம் ஆய்ந்து வைத்த அருமை பாராட்டுக்குரியதாம். பிறவுரையாசிரியர்கள் அனைவரும் இது பற்றிச் சிறிதும் நினைந்திலர். இவ்வகையில் இவ்வுரையாசிரியர் பாராட்டிற்குரியரேனும் இம்மூன்று நூற்பாக்களையும் வினையியலின் முதற்கண் வைத்திருப்பின் இன்னும் நலமாக இருக்கும் என்பது கருத்து ஆகும். முற்றின் இலக்கணத்தைக் கூறாது முற்றுக்களுக்குரிய ஈறுகளை வினையியலின் முதற்கண் கூறுதல் பொருந்தாது ஆதலான் இவை ஆண்டிருப்பதே இன்னும் பொருத்த முடையதாகும்”.

விளக்கம்

உரிச்சொல் திரிசொல் இடைச்சொல் என்பவற்றின் அடையாளத்தை எளிமையாய் அதே பொழுதில் அருமையாய் விளக்குகிறார் தெய்வச்சிலையார். "உரிச்சொல்லோடு இதனிடை (திரிசொல்லிடை) வேறுபாடு என்னை எனின், உரிச்சொல் குறைச்சொல்லாகி வரும்; திரிசொல் முழுச்சொல்லாகி வரும்” என்கிறார் (395).

எல் என்பதை உரிச்சொல்லெனக் கொண்டார் சேனாவரையர். எனினும் உரியியலுக்கு மாற்றாமல், உரிச்சொல்லாகக் கொண்டே ஆசிரியர் வைப்புப் போல இடையியலில் வைத்துத் தம் கருத்தை எழுதியமை அவர் உரையுள் அறியப்பட்டது . அச்சொல் இடைச்சொல்லே உரிச்சொல் அன்று என்று தெளிவிக்கிறார் தெய்வச்சிலையார்.

66

இது (எல்) உரிச்சொல் அன்றோ எனின், அது குறைச் சொல்லாகி நிற்கும். இது குறையின்றி நிற்றலின் இடைச்சொல் ஆயிற்று” என்கிறார். எவரையும் பெயர் சுட்டிக் கூறாமல் எழுதுதல் தெய்வச்சிலையார் வழக்கு. அவ்வழக்குப்படியே சேனாவரையரை இவண் குறியாதே உரை வரைந்தார்.

முறைவைப்புக் கூறுதலில் மிக நுணுக்கம் காட்டுகிறார் தெய்வச்

சிலையார்:

"பெயரை முதல் வேற்றுமை என்னாது எட்டு வேற்றுமையுள்ளும் யாதானும் ஒன்றை முதல் வேற்றுமை எனினும் அமையும் எனின், ஒருவன் ஒன்றை ஒன்றானே இயற்றி ஒருவற்குக் கொடுப்ப அவன் அதனை அவனினின்றும் தனது ஆக்கி ஓரிடத்து வைத்தான் கொற்றா என்றவழி, செய்கின்றான் முதல் வேற்றுமையாகி இம்முறையே கிடத்தலின் அமையாது என்க” என்று இலக்கண மரபினைப் போற்றுகிறார். இவர் காட்டும் வேற்றுமை எட்டன் வைப்புமுறைச் சிறப்பை வாழ்வியல் விளக்கத்துள் காண்க.