உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் வாழ்வியல் இலக்கணம்

259

நூற்பாவுரையிலும் வேளார் காணியைக் குறிக்கிறார் (112). செப்பு வகை நான்கனுள் வாய்வாளா திருத்தலையும் (மறுமொழி கூறாதிருத்தலையும்) ஒன்றாகக் கூறுகிறார். ஆகாயப்பூ நன்றோ தீதோ என்றார்க்கு உரையாடாமை என்கிறார் (13).

6

தொல்காப்பியம் என்பதற்கும் இவர் இலக்கணம் கூறுகிறார்: "தொல்காப்பியம் என்பதோ எனின் அஃது ஈறு திரிந்து நின்று, அவனால் செய்யப்பட்டது என்னும் பொருளை விளக்குதலின் ஆகுபெயராகாது; காரணப் பெயராம்” என்பது அது (111).

அரிய செய்திகளையும் எடுத்துக்காட்டு நயங்களையும் உடை தெய்வச்சிலையார் உரை.

யது