உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முறை வைப்பு

தமிழர் வாழ்வியல் இலக்கணம்

265

பேராசிரியர் ஓரியலுக்கும் அடுத்துவரும் இயலுக்கும் உள்ள தொடர்பை விளக்குகிறார். ஒரு நூற்பாவுக்கும் அடுத்துவரும் நூற்பாவுக் கும் உள்ள தொடர்பைச் சுட்டுகிறார். ஒரே நூற்பாவில் வரும் செய்திகளின் முறை வைப்பையும் உன்னிப்பாக எண்ணி எழுதுகிறார்.

'மேலோத்தினோடு இவ்வோத்தினிடை இயைபு என்னையோ எனின்' என்று மெய்ப்பாட்டியல் முதல் நூற்பாவில் விளக்குகிறார்.

‘நகையே அழுகை' எனத் தொடங்கும் மெய்ப்பாட்டியல் நூற்பா விளக்கத்தில் மேல் வரும் எட்டு வகை மெய்ப்பாடுகளும் முறைமுறையே வைக்கப்படுதலின் அமைதியை விரித்துரைக்கிறார். ஒரு நூற்பாவொடு தொடரும் மஃறொரு நூற்பாவின் தொடர்பு காட்டுவதாக இவை அமைகின்றன.

"பாராட்டெடுத்தல்" என்னும் நூற்பாவில் (மெய்ப்.16),"புணர்ச்சிப் பின்னரல்லது பாராட்டுள்ளம் பிறவாமையானும், அதன் பின்னரல்லது பிறரோடு கூற்று நிகழாமையானும், அக் கூற்றுக் கேட்டல்லது தமரான் ஈரமில் கூற்றம் கோடலின்மையானும், அவையெல்லாம் முடிந்தவழித் தலைவன் மேற்சென்ற உள்ளத்தாற் கொடுப்பவை கோடற்குறிப்பினளாம் ஆகலானும் அம்முறையான் வைத்தான் என்பது" என்கிறார். இவ்வாறு முறைவைப்புக் கூறுதலால், நூற்சிறப்பை நன்கு வெளிப்படுத்துகிறார் பேராசிரியர்.

வரையறை

ஒன்றைப் பற்றிக் கூறுங்கால் வரையறைப்படுத்திக் கூறும் நெறியை மேற்கொள்கிறார் பேராசிரியர்.

அச்சச் சுவையைக் கூறும் பேராசிரியர், "தன்கட்டோன்றலும் பிறன்கட்டோன்றலும் என்னும் தடுமாற்றமின்றிப் பிறிது பொருள் பற்றியே வரும்" என்பதும் (மெய்ப். 7), சமனிலை என்பது, "உலகியல் நீங்கினார் பெற்றியாகலின் ஈண்டு உலகியல் வழக்கினுட் சொல்லிய திலன்" என்பதும் போல்வன வரையறைச் சான்றுகள்.

வகைப்படுத்துதல்

வகைப்படுத்திக் கூறுதலும் பேராசிரியர் மேற்கொண்ட நெறிகளுள் ஒன்று. "நகையென்பது சிரிப்பு; அது முறுவலித்து நகுதலும், அளவே சிரித்தலும், பெருகச் சிரித்தலுமென மூன்றென்ப” என்றும் (மெய்ப். 3), "முன்னம் என்பது உயர்ந்தோரும் இழிந்தோரும் ஒத்தோரும் தத்தம் வகையான் ஒப்பச் சொல்லுதற்குக் கருத்துப்படச் செய்தல்" என்றும் (செய். 1) வரும் இன்னவை வகைப்படுத்திக் கூறற் சான்றுகள்.