உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266

இளங்குமரனார் தமிழ்வளம் - 19

நூற்பா அமைதி காட்டல்

ஒரு நூற்பாவின் யாப்புறவை மற்றொரு நூற்பாவின் யாப்புறவுடன் இயைத்துக் கூறுதலையும் பேராசிரியர் மேற்கொள்கிறார்.

"தெய்வமஞ்சல்" என்னும் நூற்பாவில் (மெய்ப். 24) "பதினொன்றனை எண்ணிச் சிறந்த பத்து இவை என்ற தென்னை எனின், அதனை, ‘ஒன்பதும் குழவியோடிளமைப்பெயரே' என்ற மரபியற் சூத்திரம்போல மொழி மாற்றியுரைக்கப்படும்" என்கிறார்.

உரை நூற்பா

தாமே உரை நூற்பா வகுத்துக் கூறுவதுபோல் கூறும் இடங்களும் பேராசிரியர் உரையில் உள. அவற்றுள் ஒன்று: இருவகை நிலனென்பன, ‘உய்ப்போன் செய்தது காண்போர்க் கெய்துதல்' அன்றோ எனின், என்று அமைத்துக் கொண்டு, அதனை விளக்குதலால் அவர் உரை நூற்பா யாத்து விளக்குதல் அறியப் பெறும் (மெய்ப். 1). இவ்வாறே 'நிரனிறுத் தமைத்தல்’ என்னும் நூற்பா உரையில் (உவம. 37) ‘அகனமர் கேள்வன்' என்றோர் நூற்பா வகுத்து ‘அதன்மேல்' என்றோர் சூத்திரஞ் செய்யின் அவையும் அலங்காரம் எனப்படும் என்பது" என்பார். அதுவும் அது.

பாடம் கூறுதல்

‘கூற்று வகை' என்பதற்குக் ‘கூற்றிவை' எனப் பாடமுண்மையைச் சுட்டும் பேராசிரியர், "இவை என்பது பாடமாயின் எண்ணிய மூன்றனையும் தொகுத்தவாறே பிறிதில்லை" என்கிறார் (செய்.1). இவ்வாறு பாடம் கூறலும் பேராசிரியர் உரைமுறைகளுள் ஒன்றாம்.

வேற்றுமை கூறுதல்

வேற்றுமை கூறுதலையும் ஒரு நெறியாகப் பேராசிரியர் கொண் டுள்ளார். அவற்றுள் ஒன்று: "குடிமையொடு பிறப்பிடை வேற்றுமை என்னை எனின், பிறப்பென்பது குடிப்பிறத்தல்; அதற்குத் தக்க ஒழுக்கம் குடிமை எனப்படும்" என்கிறார் (மெய்ப். 25).

மறுப்புரை

மறுப்புக் கூறுதல் பேராசிரியர் உரையில் தனிச்சிறப்புடையது.மிக விரிவாக ஆய்ந்து படிப்படியாக விலக்கியும் விளக்கியும் மறுத்து ஆசிரியர் கோ ளை நிலைநாட்டல் அவர்தம் முறைமை.

தளை என்பதோர் உறுப்புக் கொள்வாரை மறுத்துரைத்தல்

அதற்கொரு சான்றாம் (செய்.1).