உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் வாழ்வியல் இலக்கணம்

23

கருத்தை வெளிப்படுத்துதலில் முகத்தோற்றம் அசைவு முதலிய மெய்ப்பாடுகளே முதன்மை பெற்றன. பின்னர் இசை வழியாகவும் அதன் பின்னர் உரையாடல் வழியாகவும் அமைந்தன. எனினும் இயல் இசை கூத்து என்றே அமைந்தன.

மண் தோன்றிய பின்னர் மக்கள் தோன்றி மக்கள் தோன்றியபின் மொழி தோன்றினாலும் அம்மொழியின் பெயரே, அதனைப் பேசிய மக்களுக்கும், அம்மக்கள் வாழ்ந்த மண்ணுக்கும் பெயராயின. அதனால் தமிழ், தமிழர், தமிழகம் என்னும் பெயரீடுகள் எழுந்தன.

இனி மக்கள் வாழ்வியல் அடிப்படையில் துய்ப்பாகிய இன்பமும், இன்பத்திற்குத் தேவையாம் பொருளும், பொருளின் பயனாம் அறமும் என்னும் இன்பம், பொருள், அறம் என்பனவும் அறம் பொருள் இன்பம் எனவே வழக்குற்றன. இவையெல்லாம் அடிப்படையும் நிலைபேறும் பயனும் கருதிய அமைப்புகளாம்.

தொல்காப்பிய முதற்பகுதி எழுத்ததிகாரம் எனப்பட்டது.எழுத்து இலக்கணத்தைப் பகுத்தும் விரித்தும் கூறும் பகுதி ஆதலின் எழுத்து அதிகாரம் ஆயிற்று.

அதிகாரம் என்பதற்கு விரிவு, ஆட்சி, ஆணைமொழி எனப் பொருள்கள் உள. இவ்வெல்லாப் பொருள்களும் அமைய அமைந்தது இவ்வதிகாரம்.

அதிகாரத்தின் உட்பிரிவு இயல் எனப்பட்டது. எழுத்திலக்கணப் பகுதி ஒன்றன் இயல்பைக் கூறுவது ஆகலின் இயல் எனப்பட்டது. இயல் கூறுவது எதற்காக? செயற்பாட்டுக்காகவே இயல் கூறல் வழக்கம். ஆதலால் 'இயல் செயல்' என இணைமொழி வழக்கில் உண்டாயிற்று. ஆதலால், ஒவ்வோர் இயலும் ‘இயல் செயல்' என்பவற்றை இணைத்தே கூறுகின்றன.

ஒவ்வோர் அதிகாரமும் ஓர் ஒழுங்குபெற ஒன்பது ஒன்பது இயல்க ளாகப் பகுக்கப்பட்டுள்ளன. அவ்வகையால் எழுத்ததிகாரம், நூன்மரபு, மொழி மரபு, பிறப்பியல், புணரியல், தொகைமரபு, உருபியல், உயிர் மயங்கியல், புள்ளி மயங்கியல், குற்றியலுகரப் புணரியல் என ஒன்பது இயல்களைக் கொண்டுளது. இவை திட்டமிட்டுக் கோக்கப்பட்ட கோவை போல் சங்கிலித் தொடர்போல் அமைந்தவை.

எழுத்து என்பதன் முதனிலை எழு என்பது.எழு என்பது தோற்றம், எழுச்சி, உயர்ச்சி, அழகு, மிகுதி, உறுதி முதலிய பலபொருள் தரும் அடிச்சொல்லாகும்.

ஒலி எழுதலும், வரி எழுதலும் ஆகிய வகையாலும் எழுத்து ஒலி எழுத்து (ஒலி வடிவம்) வரி எழுத்து (வரி வடிவம்) என இருவகைக்கும்