உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்ததிகார

வாழ்வியல் விளக்கம்

பழந்தமிழர் மொழியியலை மட்டுமன்றி, நாகரிகம், பண்பாடு, கலை, வாழ்வியல் மரபுகளையும் தொகுத்து வைக்கப்பட்டுள்ள 'வைப்புப் பெட்டகம்’ தொல்காப்பியமாகும்.

எழுவாய் முதல் இறுவாய் வரை ‘வாழ்வியல் வார்ப்’பாகவே அமைந்து, நம் முந்தையர் வாழ்வைக் காட்டுவதுடன், பிந்தை மாந்தர்க்கு வேண்டும் வாழ்வியல் கூறுகளையும் வகுத்துக் காட்டி உயிரோட்டமாகத் திகழ்வதும் தொல்காப்பியமாகும்.

தொல்காப்பியர் தம் நிலையைப் படம் பிடித்துக் காட்டுவது போல், "மறுவில் செய்தி மூவகைக் காலமும்

நெறியின் ஆற்றிய அறிவன் தேயம்

என்கிறார் (1021).

செய்வன வெல்லாம் மாசுமறுவில்லாச் செயல்களாக இருத்தல்

வேண்டும்.

இறப்பு நிகழ்வு எதிர்வு என்னும் மூவகைக் காலமும் நுணுகி நோக்கிச் செய்வதாக இருக்க வேண்டும்.

அச்செயலையும் செய்யத் தக்க நெறிமுறை தவறாது செய்தல்

வேண்டும்.

இவற்றைத் தன்னகத்துக் கொண்டது எதுவோ அது, அறிவர் (சித்தர்) நிலை என்பது என்னும் பொருளது இந்நூற்பா.

மேலும்,

“வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதல்நூல் ஆகும்'

என்னும் நூற்பாவிற்கு (594) எடுத்துக்காட்டாக விளங்குவதும் தொல் காப்பியமாகும்.

"பிறரால் செய்தற்கு அரிய செயல்களைச் செய்தல் வேண்டும். அச்செயல்களை, 'யாம் செய்தேம்' என்னும் எண்ணம்தானும் தோன்றா