உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

இளங்குமரனார் தமிழ்வளம் - 19

தவராக இருத்தல் வேண்டும். அத்தகு மெய்யுணர்வு மிக்கோரால் செய்யப் பட்டது எதுவோ, அதுவே முதல்நூல் எனப்படும்" என்கிறார்.

முதல்

முதல் என்பது பிற நூல்களுக்கு மூலமானது என்னும் பொருளது. மூலமாவது வித்து. ஒரு வித்து பல்வேறு வித்துகளுக்கு மூலமாவது போல் பல நூல்களுக்கு மூலமாக அமைந்த அருமையது அது.

தொல்காப்பியம் தமிழ்ப்பரப்பில் முதல் நூல் அல்லது மூலநூல் அன்று. அதற்குரிய சான்று நூற்றுக்கணக்கில் அந்நூலிலேயே உண்டு. ஆனால், அந்நூல் வித்து நூல் எனப்படும் முதல் அல்லது மூலநூல் என்பதற்குரிய சான்றுகளோ அதனினும் மிகப்பலவாக உண்டு.

என்ப, என்மனார் புலவர், என்மரும் உளரே என வருவன, தொல்காப்பியம் தனக்கு ‘முற்படு நூல்களைத் தொகுத்துக் காட்டும் பிற்படு நூல்' என்பதற்குச் சான்றாம். ஆனால், தொல்காப்பிய வழியிலே தோற்ற முற்ற நூல்களைத் தொல்காப்பியமாகிய அளவுகோல் கொண்டு அளந்து பார்க்கும் போதுதான், அதன் 'அளப்பரும் வளம் பெருங்காட்சி' வெளிப்படும்.

முந்து நூல்

தொல்காப்பியர்க்கு முந்துநூல்கள் மிகவுண்டு. இலக்கியம் இலக்கணம் துறைநூல் கலைநூல் என வகைவகையாய் உண்டு என்பதற்குச் சான்று தொல்காப்பியத்திலேயே உண்டு என்றோம்.

ஆனால், ‘அவற்றின் பெயர் என்ன?' எனின் -‘தெரியாது' என்பதே மறு மொழி. தொல்காப்பியம் அகத்தியத்தின் வழியது என்கின்றனரே; அஃது உண்மையா?

உண்மை என்பதற்குச் சான்று தொல்காப்பியத்தில் இல்லை.

ஆளும் வேந்தரைப் "போந்தை வேம்பே ஆரென வரூஉம் மாபெருந் தானையர்” (1006) என்று சுட்டும் தொல்காப்பியர், தம் நூலுக்கு அகத்திய மென ஒரு முன்னூல் இருந்திருப்பின் அதனைச் சுட்டத் தவறியிரார்.

தொல்காப்பியத்திற்குப் பாயிரம் பாடிய பனம்பாரனாரும் குறிக்கத் தவறியிரார். ஏனெனில், அகத்தியர் மாணவருள் ஒருவர் பனம்பாரர் என்றும், தொல்காப்பியரின் ஒரு சாலை மாணவர் (உடன் பயின்றவர்) அவர் என்றும் சுட்டப்படுகிறார். ஆதலால், அவரேனும் பாயிரத்தில் சுட்டி யிருப்பார்.

அரங்கேற்றிய அவையம் ‘நிலந்தரு திருவிற் பாண்டியன் அவை யம்' என்றும், அதற்குத் தலைமை தாங்கியவர் ‘அதங்கோட் டாசிரியர்'