உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் வாழ்வியல் இலக்கணம்

27

என்றும் கூறும் அவர், அகத்தியர் பெயரைச் சுட்டிக் காட்டாமல் விட்டிரார்.

இனி, அகத்தியர் என்னும் பெயர் தொகை நூல் எதிலும் காணப் படாத ஒரு பெயர். அகத்தியர் என்னும் பெயர் மணிமேகலையில் ஒரு விண்மீன் பெயராக வருவதே முதல் வரவு. தொல்காப்பியர்க்கு ஏறத்தாழ ஓராயிரம் ஆண்டுக்குப் பிற்பட்டவர் சாத்தனார்.

அகத்தியர்

புறப்பொருள் வெண்பாமாலை, நம்பி அகப்பொருள், பன்னிரு பாட்டியல் முதலிய பாட்டியல் நூல்கள், அகத்தியர் பெயரான் அமைந்த கணிய மருத்துவ நூல்கள், கம்பர் பரஞ்சோதியார் முதலோர் பாடல்கள் எல்லாம் பிற்பட இருந்த அகத்தியர் என்னும் பெயரினர் பற்றியும் அவர் தோற்றம், செயல்பற்றியும் புனைவு வகையால் கூறுவனவேயாம்.

‘பேரகத்தியத் திரட்டு' என்பதொரு நூல், முத்துவீரியம் என்னும் பத்தொன்பதாம் நூற்றாண்டு இலக்கண நூலுக்குப் பிற்பட அகத்தியர் பெயரில் கட்டிவிடப்பட்ட நூல் என்பது வெளிப்படை. ஏனெனில் முத்து வீரியத்தில் காணப்படாத அளவு வடசொற்பெருக்கம் உடையது அது.

அன்று.

ஆதலால், தொல்காப்பியம், அகத்தியம் என்னும் நூலின் வழிநூல்

தமிழ் முந்து நூற்பரப்பெல்லாம் ஒரு சேரத் திரட்டிச் செய்நேர்த்தி, செம்மை, மரபுக் காப்பு,புத்தாக்கம் என்பவற்றை முன்வைத்துத் தொகை யாக்கப்பட்டதும் நமக்குக் கிடைத்துள்ள நூல்களுள் எல்லாம் முந்து நூலாக இருப்பதும் தொல்காப்பியமே ஆகும்.

பாயிரம்

"ஆயிர முகத்தான் அகன்ற தாயினும்

பாயிரம் இல்லது பனுவல் அன்றே

என்னும் பாயிர இலக்கணச் சிறப்புக்கு, முழு முதல் மூலச் சான்றாக அமைந்தது தொல்காப்பியப் பாயிரமேயாம்.

அப்பாயிரம், நூலுள் நூலாக ஆய்வுசெய்யப்பட்டது உண்டு.

நூலின் வேறாக நூலொடு சார்த்திச் சிவஞான முனிவராலும், அரசஞ் சண்முகனாராலும் ‘பாயிர விருத்தி' எனச் சிறப்பொடு நுணுகி ஆயப்பெற்று நூலாயதும் உண்டு.

அப்பாயிரம் ஒன்று மட்டுமேனும் தமிழ் மண்ணின் ஆள்வோர்க்கும் அறிவர்க்கும் ஊன்றியிருந்திருப்பின், பின் வந்துள்ள இழப்புகள் பற்பலவற்றை நேராமல் காத்திருக்க முடியும்.