உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் வாழ்வியல் இலக்கணம்

29

யின் மண்ணாக இராமல் நூலின் அகத்தும், நூலகத்தும் ஒடுங்கிப் போய் விடும் அல்லவோ!

எத்தனை ஊர்ப் பெயர்களைத் தெலுங்காக மாற்றினர்! எத்தனை எத்தனை தமிழ் அலுவலர்களைச் சென்னை இராச்சியமாக இருந்த போதே திட்டமிட்டுத் தெலுங்கு அலுவலராக மாற்றினர்! எத்தனை தமிழ்ப் பள்ளிக் கூட ங்களை ஒழித்துத் தெலுங்குப் பள்ளிகளை உண்ட ாக்கினர்! அப்பொழுது ஆட்சியில் இருந்தவர்கள்,

"செய்தக்க அல்ல செயக்கெடும்; செய்தக்க

செய்யாமை யானும் கெடும்

என்னும் இருவகைக் கேட்டுக்கும் சான்றாகத் தாமே இருந்தார்கள்! இன்று வரை அத்தடம் மாறாமல் தானே ஆட்சிக் கட்டில் ஏறியவர்கள் நடை முறைகள் உள்ளன! ஆயினும், ஆட்சிக் கட்டில் ஏறப் பொதுமக்கள் வாக்குகள் கிட்டுகின்றனவே ஏன்? பொதுமக்கள் வாழ்வுப் பொருளாக மொழி ஆக்கப்பட்டிலது. அதன் விளைவே இது என்பதை உணர்ந்து கட மை புரியாமல், வெறும் முழக்கத்தால் ஏதாவது பயன் உண்ட

ஆய்வு முறை

IT?

தொல்காப்பியம், வழக்கு செய்யுள் என்னும் இரண்டு அடிப்படை களிலும் ஆய்ந்து செய்யப்பட்ட நூல் என்னும் பாயிரச் செய்தி, ஆயிரமுறை ஓதி உணர்ந்து செயற்படுத்த வேண்டிய செய்தி அல்லவா!

தொல்காப்பியர் ஆய்ந்த முறையை, “வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின் எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி’

என்கிறது பாயிரம்.

எழுத்தும் சொல்லும் சொற்றொடர் ஆக்கமும் தாம் இலக்கணமா? எழுத்தும் சொல்லும் ஆராய்வது பொருள் குறித்தது அல்லவோ! “பொருள் இல்லாக்கால் எழுத்தும்

சொல்லும் ஆராய்வது எதற்கோ?'

என்னும் இறையனார் களவியல் செய்தி பொருளின் மாண்பு காட்டும்.

பொருளிலக்கணமாவது வாழ்வியல் இலக்கணம்; தமிழ் மொழியில் மட்டுமே அமைந்த இலக்கணம்!

பாயிரம்

தொல்காப்பியர் எழுத்தும் சொல்லும் பொருளும் ஆராய்ந்தார். அவர் ஆய்ந்த வகை,

1. செந்தமிழ்நாட்டு மக்கள் வழக்கொடு ஆராய்ந்தார்.