உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

இளங்குமரனார் தமிழ்வளம் - 19

2. அவர்க்கு முன்னே ஆராய்ந்து நூலாக்கம் செய்த பெருமக்களின் நூல்களை ஆராய்ந்தார்.

3. முறைமுறையே அவை ஒவ்வொன்றற்கும் முரணாவகையில் ஆராய்ந்தார்.

4. புலமைத் திறத்தோடு ஆய்ந்து கொண்ட கருத்துகளை அடைவு செய்தார்.

5. எவரும் குறை கூறா வகையில் யாத்தார்.

இவற்றைப் பனம்பாரனார் பாயிரம்,

66

எழுத்தும் சொல்லும் பொருளும் நாடிச்

6

செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப் புலம்தொகுத் தோனே போக்கறு பனுவல்

என்கிறது.

செந்தமிழ் வழக்கு

இதனால், செந்தமிழ் வழக்கே வழக்காகக் கொண்டு அச் செந்தமிழ் வழக்கைக் காக்குமாறே தொல்காப்பியம் செய்யப்பட்டது என்றும், அஃது அயல்வழக்குக் கொண்டு அமைக்கப்பட்டது அன்று என்றும், உரை காண்பாரும், உளங்கொண்டு வாழ்வாரும் அச் செந்தமிழ் வழக்குக் கொண்டே உரை காணவும் வாழ்வியல் நடை கொள்ளவும் வேண்டும் என்றும் தெளிவித்தாராம். ஆதலால், தொல்காப்பிய இலக்கணத்தையோ, வாழ்வியலையோ அயன்மைப் படுத்துவார், 'தமிழியல் கெடுத்துத் தாழச் செய்வார்' என்றும், அவர்வழி நிற்பாரும் அவர் போல் கேடு செய்வாரே என்றும் கொள்ள வேண்டும் என்றும் தெளிவு ஏற்படுத்தினாராம். அரங்கேற்றம்

ஒரு நாடு அயலாராலும் அயன்மையாலும் கெடாமல் இருக்க ஒருவழி, நூல் ஆக்கி வெளிப்படுத்துவாரைக் கண்ணும் கருத்துமாக நோக்கி யிருக்க வேண்டும். கற்பவன் ஒருவன் செய்யும் தவற்றினும், கற்பிப்பவன் செய்யும் தவறு பன்னூறு மடங்கு கேடாம்; அவன் செய்யும் கேட்டினும், நூலாசிரியன் ஒருவன் செய்யும் கேடு பல்லாயிர மடங்கு கேடாம். அக்கேடு நாட்டுக்கு ஏற்படாமல் இருக்க வேண்டும் எனின், நூலாய்த லில் வல்ல தக்கோர் அவையத்தில் அந்நூல் அரங்கேற்றப்பட்டு, அவ்வவையோர் ஏற்புப் பெற்று, அரசின் இசைவுடன் வெளியிடப்பட வேண்டும் என்னும் கட்டாயத்திட்டத்தை வைத்தாக வேண்டும்! இல்லாக்கால், 'காப்பார் இல்லாக் கழனி' என நாடு கேடுறும் என்று கூறி வழிகாட்டுகிறது அப் பாயிரம்.