உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் வாழ்வியல் இலக்கணம்

31

அதுவுமன்றி அரங்கத் தலைவன், ஒருவனையோ ஒருவகைக் கருத்தையோ சாராமல் நடுவு நிலைபோற்றும் நயன் மிக்கோனாகத் திகழவும் வேண்டும் என்றும் கூறுகிறது.

அதனை,

"அறங்கரை நாவின் நான்மறை முற்றிய

அதங்கோட்டு ஆசாற்கு அரில்தபத் தெரிந்து மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி மல்குநீர் வரைப்பில் ஐந்திரம் நிறைந்த

தொல்காப் பியன்எனத் தன்பெயர் தோற்றிப் பல்புகழ் நிறுத்த படிமை யோனே

என்கிறது.

6

ஒரு புலவரோ, சில புலவர்களோ கூடியமைத்த அமைப்பு அன்று; ஓரூர் அல்லது ஒரு வட்டார அமைப்பு மன்று; அது நாடளாவிய அமைப்பு என்பாராய், “நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து” என்கிறார்.

நூல் தணிக்கைக் குழு', என ஓர் அமைப்பு இக் குடியரசு நாளில் தானும் உண்டா?

எல்லாரும் இந்நாட்டு மன்னர்; ஒத்த உரிமையர்; பிறப்பால் வேறுபாடு அற்றவர் என்னும் குடியரசு நாளில், பிறப்புவழி வேறுபாடு காட்டும் 'வருணாசிரம்’ வருணாசிரம’-‘மநுநெறி’ நூல்கள் நாட்டில் நட LOITL

விடலாமா?

அந்நூல்களை நடையிட விட்டுவிட்டு, அத்தகு குலப்பிரிவு நூல்களை மறுத்து எழுதிய நூல்கள் “நாட்டுக்குக் கேட்டு நூல்கள்” என்று தடை செய்யப்படலாமா?

தணிக்கை

திரைப்படத் தணிக்கை என ஒரு துறை இருந்தும், குப்பை வாரிக் கொட்டியும் கோடரி கொண்டு வெட்டியும் அழிவு செய்யும் பண்பாட்டுக் கேட்டுப் படங்களையும் பளிச்சிட விடும் தணிக்கைத் துறைபோல் இல்லாமல், மெய்யான “நூல் தணிக்கைத் துறை” ஒன்று வேண்டும் என்பதைத் தொல்காப்பிய முகப்பே காட்டுவது தானே பனம்பாரர் பாயிரம்!

இவையெல்லாம் தொல்காப்பியம் வாழ்வியல் நூல் என்பதன் முத்திரைகள் அல்லவா!

தீய நூல்களையும் வன்முறை நூல்களையும் வெறிநூல்களையும் உலாவவிட்டு விட்டு ‘ஐயோ! உலகம் கெட்டுவிட்டது; மக்கள் கெட்டு விட்டனர்' என்னும் போலி ஒப்பாரி செய்தலால் என்ன பயன்?