உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

இளங்குமரனார் தமிழ்வளம் - 19

பண்படுத்தம் செய்ய விரும்புவார் சிந்திக்க வேண்டும் செய்தி

இஃதாம்.

எழுத்து

தமிழ்மொழியில் எழுத்துகள் எவ்வளவு? உயிர்-12, மெய்-18; உயிர்மெய்-216; ஆய்தம்-1 என்று 247 காட்டுவாரும்; அதற்கு மேலும் நடையிடுவாரும் உளரே! தொல்காப்பியர் என்ன சொல்கிறார்?

"எழுத்தெனப் படுவ,

அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப

சார்ந்துவரல் மரபின் மூன்றலங் கடையே

என எழுத்து 33 என்று தானே சொல்கிறார். இவ்வெழுத்து எண்ணிக்கை மிகையா?

ஆங்கிலத்தைக் கொண்டு தானே தமிழ் எழுத்தின் எண்ணிக்கை 'கூடுதல்' எனப்படுகிறது.

தமிழில் உள்ள குறில் நெடில் என்னும் இருவகையுள் ஒருவகை போதுமென ஆங்கிலம் போல் கொண்டால், ஆங்கிலம் போல் உயிரும் மெய்யும் தனித்தனியே எழுதினால் ஆங்கில எழுத்தினும் தமிழ் எழுத்து எண்ணிக்கை குறைந்து தானே இருக்கும்.

அன்றியும் ஆங்கிலம் 26 எழுத்துத்தானா?

பெரிய எழுத்து, சின்ன எழுத்து, கையெழுத்து பெரியது சின்னது என எண்ணினால்! எண்ண வேண்டும் தானே!

குறில் நெடில் என்னும் பகுப்போ, உயிர்மெய் என்னும் இணைப்போ இல்லாமையால், மூன்றெழுத்து நான்கெழுத்து என முடிவனவும் ஆறெழுத்து ஏழெழுத்து ஆகும் அல்லவோ!

தமிழ் - Tamil, Thamil, Thamizh

முருகன் = MURUGAN

நெட்டெழுத்தெல்லாம் ‘சொற்கள்' அல்லவா தமிழில்!

ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ.

கா, கீ, கூ, கே, கை,கோ.

இவை பொருளமைந்த சொற்கள் அல்லவா!

a, I என்னும் இரண்டையன்றி எழுத்துகள் சொல்லாதல் ஆங்கிலத்தில் உண்டா?

எழுத்தைச் சொன்னால் சொல் வந்து நிற்குமே தமிழில்! எதனால்?