உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் வாழ்வியல் இலக்கணம்

33

ஓரெழுத்துக்கு ஓரொலியே உண்டு. எழுத்தொலிக் கூட்டே சொல்! அ-ம்-மா -அம்மா

இந்நிலை ஆங்கிலத்தில் இல்லையே. எழுத்து வேறு; ஒலி வேறு; சொல் வேறு அல்லவா!

F, X, Z இவற்றுக்கு, ஒலியெழுத்து இரண்டும் மூன்றும் நான்கும்

அல்லவா!

மெய்யியல்

தமிழில் உள்ள எழுத்துகளின் பெயரே மெய்யியல் மேம்பாடு காட்டுவன! உயிர், மெய், உயிர்மெய், தனிநிலை, சுட்டு, வினா, குறில், நெடில், வல்லினம், மெல்லினம், இடையினம் இவை எழுத்தின் பெயர்கள் மட்டுமா? மெய்யியல் பிழிவு தானே!

-

இவற்றைக் குறிக்கும் பகுதிதானே நூன்மரபு என்னும் முதலியல்.

தமிழ், முத்தமிழ் எனப்படுமே. இசைப்பா வகைக்கு, இங்குச் சொல்லப்பட்ட இயல் இலக்கணம் மட்டும் போதுமா? “ இசை நூல் மரபு கொண்டே அதனை இசைக்க வேண்டும்; அதனை இந்நூலில் கூறவில்லை. அதனை இசைநூலில் காண்க என்கிறார் தொல்காப்பியர் நூன்மரபு நிறைவில். ஏன்? அந்நாளிலேயே இசைநூல்கள் இருந்தன; இசைக் கருவிகள் இருந்தன; இசை நூல்கள் ‘நரம்பின் மறை' எனப்பட்டன. அவற்றைக் காண்க என்பாராய்,

“அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும் உளவென மொழிப இசையொடு சிவணிய நரம்பின் மறைய என்மனார் புலவர்”

என்றார் (33).

மொழி மரபில் குற்றியலுகரம், குற்றியலிகரம், ஆய்தம் எனப்படும் சார்பு எழுத்துகள் நிற்கும் வகை, ஒலி நிலை என்பவற்றைக் கூறுகிறார். சொல்லுக்கு முதலாம் எழுத்து இறுதி எழுத்து என்பவற்றையும் கூறுகிறார்.

க்+அ=க. ‘க்’ என்பதை ‘இ' சேராமல் சொல்ல முடியுமா? 'க' என்பதை ‘இ’சேராமல் சொல்ல ஏன் முடிகின்றது?

‘க' என்பதில் ‘அ’ என்னும் உயிரொலி சேர்ந்திருத்தலால் முன்னே ஓர் உயிர்ஒலி இல்லாமல் சேராமல் - ஒலிக்க முடிகிறது.

-

மெய்-உடல் - தனியே இயங்குமா?

“செத்தாரைச் சாவார் சுமப்பார்

என்பது வழங்குமொழி ஆயிற்றே.