உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

ை இளங்குமரனார் தமிழ்வளம் - 19

உயிர் நீங்கிய உடம்புக்குப் ‘பிணம்' என்பது பெயராயிற்றே. “பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டு” என்பது நம் மந்திரம் அல்லவோ! உயிர், கூத்தன்; உடலை இயக்கும் கூத்தன்; அக் கூத்தன் போகிய உடல் இயக்கமிலா உடல். இம் மெய்யியல் விளக்கம் எழுத்தியக்கத்திலேயே காட்டுவது தொல்காப்பியம்.

"மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும்

என்பது அது (46). சிவணும் - பொருந்தும். மொழி மரபில் வரும் இயக்க இலக்கணம் இது.

எழுத்துகளின் இயக்கம், இரண்டு புள்ளிகள் வருமிடம், ஒலி கூடுதல் குறைதல் என்பவற்றை மொழிமரபில் சுட்டிக் காட்டி எழுத்துகள் பிறக்கும் வகையைப் பிறப்பியலில் கூறுகிறார்.

நனிநாகரிகம்

சகர உகரம் (சு) உசு, முசு என்னும் இரண்டிடங்களில் மட்டுமே சொல்லின் இறுதியாகவரும்.

பகர உகரம் (பு) தபு என்னும் ஓரிடத்து மட்டுமே சொல்லிறுதியாக வரும்; ஆனால் தன்வினை பிறவினை என்னும் இருவினைக்கும் சொல் முறையால் இடம் தரும். தபு - சாவு (தன்வினை) அழுத்திச்சொன்னால்,

தபு - சாவச் செய் (பிறவினை) என்கிறார்.

சு, பு என்னும் எழுத்துகளை உச்சகாரம், உப்பகாரம் என்று குறிப்பிடுவது நாகரிகம் அல்லவோ!

பீ என்பதையும் ஈகார பகரம் என்பது இதனினும் நனிநாகரிகம் அல்லவோ! (234)

‘பசு’ என்பது தமிழ்ச் சொல் அன்று என்றுணர, L வரையறை செய்கிறாரே!

மொழியியலாம் அசையழுத்தத்தைத் தபு என்பதன் வழியே காட்டுகிறாரே! எத்தகு நுண் செவியரும் நாகரிகருமாக நூல் செய்வார் விளங்கவேண்டும் என்பது குறிப்பாகும் அல்லவோ! (75,76;79,80)

உயிர்மெய் அல்லாத தனி மெய் எதுவும் எச்சொல்லின் முதலாகவும் வாராது என்பதை ஆணையிட்டுக் கூறுகிறார் தொல்காப்பியர்;

ப்ரம்மரம்

க்ரௌஞ்சம்

-இச்சொற்கள் வேற்று மொழிச் சொற்கள். இவை தமிழியற்படி

பிரமரம்