உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் வாழ்வியல் இலக்கணம்

35

கிரௌஞ்சம்

என்றே அமைதல் வேண்டும்.

‘ப்ரான்சு’

‘ஷ்யாம்’

ன்னவாறு எழுதுவது மொழிக் கேடர் செயல் என மொழிக்

காவல் கட்டளையர் ஆகிறார் தொல்காப்பியர்.

"பன்னீருயிரும் மொழிமுத லாகும்”

“உயிர்மெய் அல்லன மொழிமுத லாகா

என்பவை அவர் ஆணை (59. 60).

புள்ளி எழுத்துகள் எல்லாமும் சொல்லில் இறுதியாக வருமா? வாரா! ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள் என்னும் பதினொன்றுமே வரும் (78).

ஏன்?

க், ச், ட், த், ப்,ற், ங் என்னும் ஏழும் சொல்லின் இறுதியில் வாரா!

சொல்லிப்பார்த்தால் மூச்சுத் தொல்லை தானே தெரியும். ஆதலால், நெடுவாழ்வுக்குத் தமிழியல் உதவும் என்று ஒலியாய்வாளர் குறித்தனர். ‘மூச்சுச் சிக்கன மொழி தமிழ்' என்பதை மெய்ப்பித்தவர் பா.வே.மாணிக் கர். தொல்காப்பியக் காதலர் மட்டுமல்லர் காவலரும் அவர்.

பாக்பாக்கு

பேச் - பேச்சு

வேறுபாடு இல்லையா.

நெல், எள் என்பனவற்றையே நெல்லு, எள்ளு என எளிமையாய் ஒலிக்கும் மண், வல்லின ஒற்றில் சொல்லை முடிக்குமா?

மூல ஒலி தோன்றுமிடம் உந்தி. ஆங்கிருந்து கிளர்ந்த காற்று தலை, கழுத்து,நெஞ்சு ஆகிய இடங்களில் நின்று, பல், இதழ், நா, மூக்கு, மேல்வாய் 6 என்னும் உறுப்புகளின் செயற்பாட்டால் வெவ்வேறு எழுத் தொலியாக வரும் என்று பிறப்பியலைத் தொடங்கியவர் (83) வெளிப்படும் இவ்வொலியை யன்றி அகத்துள் அமையும் ஒலியும் உண்டு; அஃது அந்தணர் மறையின்கண் கூறப்படுவது. அதனைக் கூறினேம் அல்லேம் எனத் தமிழ்த்துறவர் ஓக நூன் முறையைக் கூறி அவண் கற்குமாறு ஏவுகிறார் (102).

சொல்லின் முதலும் இறுதியும் இரண்டே என்பாராய்,