உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

இளங்குமரனார் தமிழ்வளம் – 19

“எல்லா மொழிக்கும் இறுதியும் முதலும் மெய்யே உயிரென்று ஆயீர் இயல

என்கிறார் (103).

அ, ஆ; க, கா என்பவற்றை அகரம் ஆகாரம், ககரம், ககர ஆகாரம் எனச் சாரியை (சார்ந்து இயைவது) இட்டு வழங்குவதும், அஃகான், ஐகான் எனக் கான்சேர்த்து வழங்குவதும் மரபு என்கிறார் (134,135).

மணி + அடித்தான் = மணியடித்தான்

அற + ஆழி = அறவாழி

இவற்றில் ய், வ் என்னும் இரண்டு மெய்களும் ஏன் வந்தன?

ம்பட-

நிற்கும் சொல்லின் இறுதியும் வரும் சொல்லின் முதலும் உயிர் எழுத்துகள் அல்லவா! இரண்டு உயிர்கள் இணைதல் வேண்டுமானால் இணைக்க இடையே ஒரு மெய் வருதல் வேண்டும். அம்மெய் உ உடம்படுத்த- வருமெய் ஆதலால் உடம்படுமெய் என்றனர். மெய்யியற் சீர்மை, மொழிச் சீர்மை ஆகின்றதே!

“எல்லா மொழிக்கும் உயிர்வரு வழியே

உடம்படு மெய்யின் உருவுகொளல் வரையார்'

என்கிறார் (140).

பொருள்தெரி புணர்ச்சி

"மாடஞ் சிறக்கவே"

என்பதொரு வாழ்த்து. இது “மாடம் சிறக்கவே” என்பது. இதனை,

"மாடு அஞ்சு இறக்கவே"

என்று பிரித்து உரைத்தால் 'சாவிப்பு' ஆகவில்லையா! இதனைக் கருத்தில் காண்டு மறுதலைப் பொருள் வராவகையில் சொல்ல வேண்டும் என்பதற்காக,

“எழுத்தோ ரன்ன பொருள்தெரி புணர்ச்சி இசையில் திரிதல் நிலைஇய பண்பே"

என்கிறார் (141). எழுத்து ஒரு தன்மையதுதான்; ஆனால், சொல்லும் முறை யால் வேறு பொருள் தருகின்றமையைக் குறிப்பிட்டுத் தெளிவிக்கிறார்.

“பரிசாகப் பெற்றேன்; பரிசாகப் பெற்றேன்” என்றான் ஒருவன். அவன், பரிசாகப் பெற்ற பரி, சாகப் பெற்றதில் சொல் மாற்றம் இல்லையே; பொருள் மாற்றம் பெருமாற்றம் இல்லையா?

அது, 'நீர் விழும் இடம்' என்றால் குறிப்பார் குறிப்புப் போல் இருபொருள் தரும் அல்லவோ! இதனையும் குறிக்கிறார் வாழ்வியல் வளம் கண்ட தொல்காப்பியர் (142).