உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் வாழ்வியல் இலக்கணம்

37

எழுத்து வரிசை

“கண்ணன் கண்டான்’

வந்தது.

“தென்னங் கன்று”

கண்ணன் என்பதில் 'ண்' என்பதை அடுத்து அதே எழுத்து (ண)

கண்டான் என்பதில் ‘ண்' என்பதை அடுத்து அதன் இன எழுத்து ன (ட) வந்தது.

தென்னம் என்பதில் ‘ன்' என்பதை அடுத்து அதே எழுத்து (ன)

வந்தது.

வந்தது.

கன்று என்பதில் ‘ன்' என்பதை அடுத்து அதன் இன எழுத்து (று)

இவ்வாறே க,ங; ச,ஞ; ட,ண; த,ந; ப,ம; ற,ன ஒற்று வரும் டங்களைக் காணுங்கள். அவ்வொற்று வரும்; அல்லது அதன் இன ஒற்று வரும். இத்தகு சொல்லமைதியைப் பொதுமக்கள் வாயில் இருந்து புலமக்கள் கண்டுதானே தமிழ் நெடுங்கணக்கும் குறுங்கணக்கும் வகுத்துளர். ஒரு வல்லினம், ஒரு மெல்லினம் என அடுத்தடுத்து வைத்தது ஏன்? வல்லினமாகவே மெல்லினமாகவே இடையினம் போல அடுக்கி வைக்காமை வாழ்வியல் வளம்தானே!

கங, சஞ என அடங்கல் முறையில் வல்லினத்தின்பின் மெல்லினம் வரினும்,சொல் வகையில் மெல்லினத்தின் பின் வல்லினம் வருதல் மக்கள் வழக்குக் கண்ட மாட்சியின் அல்லது ஆட்சியின் விளைவே ஆகும்.

ங்க, ஞ்ச (தங்கம், மஞ்சள்) என வருதலை யன்றி, க்ங, ச்ஞ எனவரும் ஒரு சொல்தானும் இல்லையே! இன்றுவரை ஏற்பட வில்லையே! எழுத்து முறையை ஙக ஞ்ச ண்ட என மாற்றிச் சொல்ல எவ்வளவு இடர்? இது பழக்கமில்லாமை மட்டுமா? இல்லை! இயற்கை யல்லாமையும் ஆம். தமிழின் இயற்கை வளம் ஈது! (143)

அளவை

தொல்காப்பியர் நாளில் ‘பனை' என ஓர் அளவைப் பெயரும் ‘கா’ என ஒரு நிறைப் பெயரும் வழக்கில் இருந்தன. அன்றியும் கசதபநமவஅ உ என்னும் எழுத்துகளை முதலாகக் கொண்ட சொற்களால் அளவைப் பெயரும் நிறைப் பெயரும் வழக்கில் இருந்தன. (169,170) அவை:

6

கலம் சாடி தூதை பானை நாழி மண்டை வட்டில் அகல் உழக்கு

எனவும்,

கழஞ்சி சீரகம் தொடி பலம் நிறை மா வரை அந்தை எனவும்

வழங்கின.