உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

இளங்குமரனார் தமிழ்வளம் – 19

இவையன்றி உரையாசிரியர்களின் காலத்தும் அதன் பின்னரும் வேறுவேறு அளவைகள் வழங்கியுள்ளன. இவையெல்லாம் நம்முந்தையர் வாழ்வியல் சீர்மைகள்!

அளவுக்குப் பயன்பட்டது கோல். அக் கோல் அளவுகோல் எனப்பட்டது. அக் கோல் மாறாமல் செங்கோல், நிறைகோல், சமன்கோல், ஞமன்கோல், நீட்டல்கோல், முகக்கோல், எழுதுகோல், தார்க்கோல் என வழக்கூன்றின.

அண்மைக் காலம்வரை கலம், மரக்கால், நாழி, உரிஉழக்கு, தினையளவு, எள்ளளவு, செறு, வேலி முதலாகப் பலவகை அளவை வழக்குகள் இருந்தன. பொதி, சுமை, கல், வண்டி, துலாம், தூக்கு என்பனவும் வழங்கின. இவையெல்லாம் நம்மவர் பல்துறை வளர்வாழ்வு காட்டுவன வாம் (170).

யாவர்

‘யாவர்’ என்பது ‘யார்’ எனவும்படும்.

‘யாது' என்பது 'யாவது' எனவும்படும்.

இன்னவை வழக்கில் உள்ளவை கொண்டு ஏற்றுக்கொள்ளத் தக்கவை என மக்கள் வழக்கை மதித்து மொழிவளர்க்கச் செய்கிறார் (172).

உரு

உரு என்பது என்ன? வடிவு; உருபு என்பது வடிவின் அடையாளம். அதன் விளக்கமாவது உருபியல். அதிலே, அழன் புழன் என்னும் சொற்கள் சாரியை பெறுதல் பற்றிக் கூறுகின்றது ஒரு நூற்பா (193).

அழன், புழன்

அழலூட்டப்படுவதும் புதைக்கப்படுவதுமாகிய பிணம் முறையே அழன், புழன் எனப்படுகின்றன. “இடுக ஒன்றோ, சுடுக ஒன்றோ” என்பது புறநானூறு. புறங்காடு எனப் பொதுப்பெயர் உண்டாயினும், இடுகாடு, சுடுகாடு என்னும் பெயர்கள் இன்றுவரை நடைமுறையில் உள்ளனவேயாம். இடுகாடு, புதைகாடு எனவும் சுடுகாடு, சுடலை எனவும் வழங்குதலும் உண்டு. அழன் புழன் என்பவற்றைச் சுட்டுகிறார் தொல்காப்பியர் (193).

தொல்காப்பியர் உதி, ஒடு, சே என்னும் மரங்களைக் குறிக்கிறார். ஒன்றனைக் கூறி அதுபோல, அதுபோல எனத் தொடர்கிறார் (243,262,278). "உதிமரக் கிளவி மெல்லெழுத்து மிகுமே

“ஒடுமரக் கிளவி உதிமர இயற்றே”

“சேஎன் மரப்பெயர் ஒடுமர இயற்றே