உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் வாழ்வியல் இலக்கணம்

39

என்பவை அவை. உதிங்கிளை, ஒடுங்கிளை, சேங்கிளை எனவருதலைக் குறிக்கிறார். ஏன் இப்படித் தொடரவேண்டும்? உதி (இ), ஒடு (உ), சே (ஏ) என, சொல் ஈறு வேறுவேறு இல்லையா? ஆதலால் அவ்வவ் விடத்து வைத்துச் சொல்கிறார். அவர் கையாண்ட அரிய நூன்முறை இது. வைத்த இடத்தை மாற்றாமை வைப்புமுறை என நம் வீட்டிற்கும் அலுவலகத் திற்கும் உரிய பொருள்களையும் கோப்புகளையும் ஒழுங்குற வைக்க வழிகாட்டும் வழிகாட்டுதல் எனக் கொள்ளலாம் அல்லவா!

உதிமரம் ஒதியாக வழங்குகிறது. ஒதி பருத்து உத்திரத்திற்கு ஆகுமா என்பது பழமொழி. ஒதியனேன் என வள்ளலார் தம்மைத் தாமே சுட்டிக் கொண்டார்! அவர்க்கா அது?

ஒடு என்பது உடை என்னும் மரம்; முள்மரம். ஒட்டரங்காடு, ஒடங்காடு என்பது பாஞ்சாலங்குறிச்சிப் பாட்டு.

சேங்கொட்

செந்நிறத்தது. தேற்றாங் கொட்டை ட என்பதும் அது. தொல்காப்பியர் மரநூல் வல்லார் என்பது மரபியலில்

பெருவிளக்கமாம்.

பனம்பாளையைச் சீவி வடித்த நீரைக் காய்ச்சிப் பாகாக்கிப் பனை வட்டு (வட்டமாக்கிய திரளை) எடுத்தனர். அதனை பனை + அட்டு பனாட்டு என்றனர். அப்பனாட்டு இது கால் பனை வட்டு என வழங்கப் படுதல் எவரும் அறிந்தது. அட்டு, வட்டு என்ற அளவில் நிற்கவில்லை. கட்டி எனவும் வழக்கூன்றியது. கருப்புக் கட்டி (கரும்பில் இருந்து எடுத்தது) சில்லுக் கருப்புக் கட்டி என்றும் ஆயிற்று. பனங்கட்டி,தென்னங்கட்டி இரண்டும் வெல்லக்கட்டி, சருக்கரைக் கட்டி என்றும் ஆயின. பனைக் கொடி சேரர் கொடி இல்லையா!

ஏழ்பனை நாட்டையும் ஏழ்தெங்க நாட்டையும் இவை நினை வூட்ட வில்லையா! ஏழேழு நாடு என்பதன் எச்சமே ஈழ நாடு என்றும் ஏழ்பனை நாட்டின் சான்றே யாழ்ப்பாண நாடு என்றும் நம் வரலாற்றுப் பெருமக்களைத் தூண்டித் துலங்கச் செய்ததை நாம் அறியலாமே.

கல்லாதவரும் புளிமரம் என்னார். புளியமரம் என்றே கூறுவார். புளியங்கொம்பு, புளியங்காய் என்றே வழங்குவார்.

புளிங்கறி, புளிங்குழம்பு, புளிஞ்சாறு என மெல்லெழுத்துவரக் கூறுவதும் வழக்கு.

அன்றியும் புளிக்கறி, புளிக்குழம்பு, புளிச்சாறு என்பதும் வழக்கே. இவையெல்லாம் தொல்காப்பியர் காலம் தொட்டே வழங்கப்படுதல் வியப்பில்லையா? (244 -246).